முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

ஆய்வுகளின்படி, மைக்ரோவேவிங் அலுமினியம் ஃபாயில் அலுமினியத்தை பிரதிபலிக்கிறது. இது உணவை சீரற்ற முறையில் (uneven cooking) சமைக்க வழிவகுக்கிறது.

  • 19

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    அலுமினியம் ஃபாயில் (Aluminium Foil) என்பதை பலவிதமாகப் பயன்படுத்தலாம், அதாவது சமையலறையில் மட்டுமல்ல அதையும் தாண்டி பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. கிரில்லிங் செய்யும் போது ஒரு பீஸ் இறைச்சியை மூடி வைப்பது (wrapping செய்வது) முதல் நாம் பயணம் செய்யும் போது உணவுகளை பேக்கிங் செய்து எடுத்து செல்வது வரை பல விஷயங்களில் அலுமினியம் ஃபாயில் ஷீட் பயன்படுத்தப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    பல நேரங்களில் Aluminium Foil நமக்கு கைகொடுத்தாலும் சில நேரங்களில் இதன் சில பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை பலர் உணர தவறிவிடுகிறார்கள். ஆனால் உங்கள் கிச்சனில் இருந்து அலுமினியம் ஃபாயிலை முற்றிலும் அகற்ற வேண்டும் என்பது அர்த்தமில்லை. ஆனால் இதன் பலன்களை முழுமையாக பெற Aluminium Foil-ஐ திறம்பட பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள். அலுமினியம் ஃபாயில் ரேப்-ஐ (Aluminium Foil Wrap) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    சமையலில் Aluminium Foil பயன்படுத்துவது பாதுகாப்பானதா...? கேக்-ஐ பேக்கிங் செய்யும் போதோ அல்லது சில காய்கறிகளை ரோஸ்ட் செய்யும் போதோ அவற்றை சிலர் Aluminium Foil-ல் வ்ரேப் செய்வார்கள். ஆனால் இப்படி செய்யலாமா.! குக்கிங்கின் போது Aluminium Foil-ஐ பயன்படுத்துவது உணவில் அலுமினியத்தை ஊடுருவச் செய்யும் என்று நிபுணர்கள் குழு கூறினாலும், சிலர் இதனை பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்கின்றனர். இதில் எதை எடுத்து கொள்வது என்று நீங்கள் குழம்பினால் மேற்கொண்டு படிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 49

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    Centre For Disease Control And Prevention-ன் கூற்றுப்படி உணவு மற்றும் நீரில் உள்ள அலுமினியம் செரிமான பாதை மற்றும் Blood stream மூலம் நம் உடலுக்குள் நுழைகிறது, ஆனால் இவை முறையே மலம் மற்றும் சிறுநீர் வழியே விரைவாக வெளியேறுகிறது. இருப்பினும் ஜர்னல் ஆஃப் எலக்ட்ரோகெமிக்கல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் அமிலம் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் அதிக வெப்பநிலையில் Aluminium Foil-ல் சமைக்கப்பட்டால், அதிக அளவு தாது (அலுமினியம்) கசிவுக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். மேற்கண்ட 2 விஷயங்களையும் கருத்தில் கொண்டால், சமையலில் Aluminium Foil பயன்படுத்தலாம். ஆனால் அதனை எப்படி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு ஒருவர் பயன்படுத்துவது அவசியமாகிறது. சமையலறையில் Aluminium Foil-ஐ பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை & செய்ய கூடாதவை:

    MORE
    GALLERIES

  • 59

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    மூடி வைக்க பயன்படுத்தலாம்... சமைத்த உணவை மூடி வைக்க நீங்கள் எப்போதும் போல Aluminium Foil-ஐ Wrap செய்ய பயன்படுத்தலாம். இது உங்கள் உணவின் மாய்ஸ்ட்டரை (Moisture) தக்க வைத்து உணவை ஃப்ரெஷ்ஷாக மற்றும் நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 69

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    உணவை மீண்டும் சூடாக்க பயன்படுத்தாதீர்கள்... ஆய்வுகளின்படி, மைக்ரோவேவிங் அலுமினியம் ஃபாயில் அலுமினியத்தை பிரதிபலிக்கிறது. இது உணவை சீரற்ற முறையில் (uneven cooking) சமைக்க வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    தக்காளியை ரோஸ்ட் செய்ய பயன்படுத்தாதீர்கள்... தக்காளி ஒரு அசிடிக் ஃப்ரூட் ஆகும். இது Aluminium Foil-ல் இருக்கும் அலுமினியத்துடன் வினைபுரிந்து உணவை நச்சு தன்மையாக்க கூடும்.

    MORE
    GALLERIES

  • 89

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    பேக்கிங்கிற்கு பயன்படுத்த வேண்டாம்... பலர் பேக்கிங் செய்யும் போது Parchment paper-க்கு மாற்றாக அலுமினியம் ஃபாயிலை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது மோசமான விஷயம், அலுமினியம் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதனால் அலுமினியம் ஃபாயிலுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் மாவு அல்லது மாவின் ஒரு பகுதி மற்ற பகுதியை விட அதிக வெப்பத்தை உறிஞ்சும். இதன் காரணமாக குக்கீஸ் மற்றும் கேக்குகளின் சில பகுதிகள் எரிந்து விட கூடும்.

    MORE
    GALLERIES

  • 99

    பேக்கிங் செய்ய அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? தவிர்க்க வேண்டிய தவறுகள்..!

    கெட்டுப்போகாத உணவு பொருட்களை சேமிக்கவும்... Moisture-ஐ அப்படியே லாக் செய்து வைக்க அலுமினியம் ஃபாயில் சிறந்த ஒன்று. பொதுவாக உணவுகள் பதப்படுத்தப்பட்டாலோ, உலர்த்தப்பட்டாலோ, ப்ரிசர்வ்ட் செய்யப்பட்டாலோ அல்லது அவற்றிலிருக்கும் ஈரப்பதத்தை அகற்றினாலோ அவை கெட்டு போகாத உணவுகளாக கருதப்படுகின்றன. இது போன்ற கெட்டுப்போகாத மற்றும் ட்ரை ஃபுட்ஸ்களை அலுமினியம் ஃபாயிலில் சேமித்து வைப்பது அதன் ஷெல்ஃப்-லைஃபை நீட்டிக்க உதவுவதோடு, Moisture-ஐ லாக் செய்து ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

    MORE
    GALLERIES