ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

வட கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால உணவு என்றால் இது தான். இந்த நாளில் மணிப்பூரி மக்கள் கோழிக்கறியைத் தவிர மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் என்ஜிஏ அடோய்பா தோங்பா வை சமைக்கின்றனர். மீனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேரும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.

 • 16

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  டிசம்பர் மாதம் வந்தாலே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால கொண்டாட்டங்களும், விதவிதமாக கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகள் தான் முதலில் நம்முடைய நினைவுக்கு வரும். இயேசு பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அந்நாளில் தங்களுக்குத் தெரிந்த இனிப்பு மற்றும் கேக்குகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவதோடு உறவினர்களுக்குக் கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் இந்த பண்டிகை நாளில் இனிப்புகளைத் தாண்டி வாயில் எச்சில் ஊற வைக்கும் பல உணவுகள் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. அவை என்னென்ன? எப்படி செய்யலாம்? என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  என்ஜிஏ அடோய்பா தோங்பா (NGA ATOIBA THONGBA): வட கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால உணவு என்றால் இது தான். இந்த நாளில் மணிப்பூரி மக்கள் கோழிக்கறியைத் தவிர மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் என்ஜிஏ அடோய்பா தோங்பா வை சமைக்கின்றனர். மீனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேரும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.
  செய்முறை: இதை செய்வதற்கு முதலில் முள் இல்லாமல் மீன்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் மிளகு, மசால், மிளகாய்த்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, இஞ்சி மற்றும் பூண்டு விழுதைச் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மீன்களை உள்ளே போட்டு வதக்க வேண்டும். ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு மசாலா கலவையைச் சேர்க்க வேண்டும். இதனையத்தொடர்ந்து உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற காய்கறிகளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் போதும். சுவையான என்ஜிஏ அடோய்பா தோங்பா ரெடியாகிவிடும். இந்த டிஸ் வழக்கமான அசைவ உணவுகள் போல் இல்லாமல் தனித்துவமான சுவையுடன் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  குல் குல்ஸ் (KULKULS) : கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யப்படும் பலகார வகைகளில் ஒன்று தான் குல் குல். முட்டை மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யும் போது இந்த பலகாரத்தின் சுவை அதிகரிக்கும். இதைச் செய்வதற்கு மைதா, நெய், சீனி, ரவை, பால் அல்லது தண்ணீர், பேக்கிங் பவுடர் தேவை. கூறப்பட்ட அனைத்துப் பொருள்களையும் தண்ணீர் அல்லது பால் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பொருள்களை உருண்டையாக பிடித்து பொறித்து எடுத்தால் குல் குல் ரெடியாகிவிடும். இவற்றை கலகலா, கல்கல் என்ற பெயர்களும் உண்டு.

  MORE
  GALLERIES

 • 46

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  டக் மொய்லி (DUCK MOILEE): பராம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக டக் மொய்லி உள்ளது. அசைவ உணவு பிரியர்களுக்கு தனித்துவமான சுவையை வழங்கும் டிஸ்களில் ஒன்றாக உள்ளது. இதைச் செய்வதற்கு முதலில் கடாயில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் வாத்து கறிகளை உள்ளே போட்டு மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். கொஞ்சம் கறி வெந்தவுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனுடன் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்த்துப் பரிமாறலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  கரிமீன் மோலி (KARIMEEN MOLLY): கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று கரி மீன் கோலி. தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு கிரீமி சுவையுடன் உள்ளது. இதனுடன் மசாலா கலந்து செய்யப்படுவதால் மீன் குழம்பிற்கு சுவை அதிகம். இதை ஆப்பம் போன்றவற்றிற்கு சைடு டிஸ்ஸாக பரிமாறலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்... ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!

  ரோஸ் குக்கீ (அச்சு முறுக்கு): தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி செய்யப்படும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்று தான் ரோஸ் குக்கீ எனப்படும் அச்சு முறுக்கு. இனிப்பு கலந்த சுவையுடன் மொறு மொறுப்பாக செய்யப்படுவதால் பிரபல பலகாரங்களில் ஒன்றாக உள்ளது.

  MORE
  GALLERIES