மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை போய், இப்போது நம்முடைய வசிப்பிடமே ஒரு மலைப்பிரதேசம் போல காட்சியளிக்கிறது.குதூகலமான இந்த யை நாம் அனுபவித்து தீர்க்கும் அதேவேளையில், இந்த பருவத்தில் அதிகம் கிடைக்க கூடிய ப்ளம்ஸ் மற்றும் செர்ரி பழங்களை தவற விடக் கூடாது. இனிப்பும், கொஞ்சம் புளிப்பும் சேர்ந்த சுவை கொண்ட இந்த பழங்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவையாக இருக்கும். ஊட்டச்சத்துகள், விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து போன்றவை நிரம்பியுள்ளன. நம் நாவில் எச்சில் ஊற வைக்கும் கேக், ஊறுகாய், ஜாம் போன்றவற்றில் ப்ளம்ஸ் பழம் பயன்படுத்தப்படுகிறது.