முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த சுவை மிகுந்த லிச்சி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது.

  • 16

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    கோடை காலம் நெருங்கி விட்டாலே லிச்சி பழங்களை பற்றிய ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து விடுகிறது. நாவிற்கு சுவை மிகுந்ததாக மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை லிச்சி பழங்கள் அளிக்கின்றன. இதில் பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும் நிறைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 26

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    இவற்றைத் தவிர லிச்சி பழங்களை அதிகம் உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமான திறனையும் அதிகரிக்கிறது. சிலர் இதன் தோலை உரித்து அப்படியே சாப்பிட விரும்புவார்கள். வேறு சிலரோ இதனை ஜூஸாக மாற்றி, அதனோடு சிறிது சர்க்கரையை சேர்த்தும் உட்கொள்ள விரும்புபவர்கள். ஆனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த சுவை மிகுந்த லிச்சி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    உண்மையிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் லிச்சி ஜூசை அவ்வப்போது அருந்தலாம். ஆனால் லிச்சி பழத்தை ஜூஸ் போல குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுவதை அதிக நன்மைகளை கொடுக்கும். ஏனெனில் ஜூஸ் அல்லது ஸ்மூத்தி போன்று தயாரிக்கும் போது கூடுதலாக சர்க்கரையை சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆபத்தாக முடியும். ஒருவேளை சர்க்கரையை அதிக அளவில் சேர்த்து விடும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பாதைகளை ஏற்படுத்த கூடும்..

    MORE
    GALLERIES

  • 46

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    மேலும் தற்போது வரை சர்க்கரை நோயாளிகள் லிச்சிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் எந்தவித அறிக்கைகளும் இல்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக லிச்சி பழத்தை உட்கொள்ளலாம் ஆனால் ஒரு அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. பழம் எவ்வளவு சுவையாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    அதே சமயத்தில் லிச்சி பழத்தில் சிறிய அளவில் சர்க்கரை இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. லிச்சி பழத்தில் உள்ள சர்க்கரையில் இருக்கும் பிரக்டோஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை வெகுவாக குறைக்கிறது. லிச்சி பழத்தை நீங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி அதிக அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை நம்மால் தடுக்க முடியாது. எனவே சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழத்தை சாப்பிட விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உடல் நலத்தை பரிசோதித்து கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 66

    சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகம் இருக்கும் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக லிச்சி பழத்தை சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே கிளைகாமிக் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். ஏனெனில் இது மட்டுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

    MORE
    GALLERIES