'டெக்னீக்கல்' ஆக பேசினால் முந்திரி உண்மையில் 'நட்ஸ்' வகையை சேர்ந்தது அல்ல. முந்திரி 'ட்ரூப்' (Drupe) என்று வகைப்படுத்தப்படுகிறது; ஏனெனில் இது வெளிப்புறத்தில் சதைப்பற்றுள்ள ஆனால் உள்ளே ஒரு விதையைக் கொண்டுள்ளது. பாதாம் மற்றும் பிஸ்தா கூட இந்த வகையின் கீழ் தான் வரும். மற்ற நட்ஸ்களைப் போலவே, முந்திரியிலும் மோனோசாச்சுரேட்டட் & பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளன. அதவாது இந்த நட்ஸ் வகைகள் கெட்டுப்போகக்கூடும்! ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்! முந்திரியை நாம் 'நட்' என்று அழைப்பதால் அது கெட்டுப்போகாது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு!
அதை அப்படியே காற்றுப்புகாத ஜாடியில் அல்லது ப்ரீஸர் பேக்கில் மாற்றவும். ப்ரீஸர் பேக்கில் மாற்றும் போது அதை சீல் செய்வதற்கு முன் காற்றை வெளியேற்றி விடவும்; இல்லையெனில் ஈரப்பதம் தங்கிவிடும். மேலும், முந்திரியை கிச்சன் கேபினெட் அல்லது ஃப்ரீசர் போன்ற குளிர்ச்சியான மற்றும் இருண்ட இடத்தில் தான் வைக்க வேண்டும். இதன் மூலம் முந்திரி அதிக காலம் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.
முந்திரியின் பொதுவான 'எக்ஸ்பைரி' காலம் எவ்வளவு? உங்களிடம் நிறைய முந்திரிகள் இருந்தால் அவற்றை நான்கு வாரங்கள் வரை ஸ்டோர் ரூமில் சேமிக்கலாம். ஆனால் அவைகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டால் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். அதே சமயம் திறக்கப்படாத முந்திரி பொட்டலத்தை ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்திருந்தால், சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும்.
கெட்டுப்போன / காலாவதியான முந்திரிகளை அடையாளம் காண்பது எப்படி? கெட்டுப்போன முந்திரிகளில் பெரும்பாலானவை நிறமாற்றம் மற்றும் வெள்ளை அச்சுகளுடன் காணப்படும். காலாவதியான முந்திரி கசப்பான சுவை மற்றும் அதில் பெயிண்ட் போன்ற வாசனையுடன் இருக்கும். மேலும், அவற்றில் புளிப்பு வாசனை இருக்கிறதா என்றும் பாருங்கள், இப்படியாக அழுகிய முந்திரியை எளிதில் அடையாளம் காணலாம்.
கூடுதல் டிப்ஸ்: பெரும்பாலும் முந்திரிகளில் பூஞ்சைகள் ஏற்படும் முன்பு வரை, அதை சாப்பிடுவது நல்லது தான், எந்த சிக்கலும் இல்லை. இருப்பினும் நீனால் வாங்கும் முந்திரியை நான்கு வாரங்களுக்குள் உட்கொள்ளும் பழக்கம் உங்களிடம் இருந்தால் குறைந்த அளவிலேயே முந்திரியைவாங்கும்படி பரிந்துரைக்கிறோம். மேலும் அவற்றைச் சரியாகச் சேமித்து வைப்பதற்கான - மேற்கண்ட - விதிகளையும் பின்பற்றுங்கள், அப்போதுதான் முந்திரியை 'ஃப்ரெஷ்' ஆக வைத்திருக்க முடியும்.