

திருமணம் நிச்சயிக்கப்பட்டாலே பெண்கள் டயட் இருக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஏனெனில் தங்களுடைய திருமண நாளில் கச்சிதமான உடலழகுடன் தெரிய வேண்டும் என்றுதான் இவ்வளவு மெனக்கெடலும். அப்படி நீங்களும் டயட் இருக்க நினைக்கிறீர்கள் பட்டினி கிடக்காமல், இயல்பான காய்கறிகளை சாப்பிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பே இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன பார்க்கலாம்.


காஃபி : நீங்கள் காஃபி பிரியர் எனில் இது கொஞ்சம் கஷ்டம்தான். இருப்பினும் அழகு வேண்டுமெனில் இதையெல்லாம் தவிர்க்கத்தான் வேண்டும். ஏனெனில் காஃபி வயிற்றை மந்தமாக்கும். இதனால் வயிற்றுக்கோளாறுகள் உண்டாகும். எனவே காஃபியை தவிர்ப்பது நல்லது.


காரசாரமான உணவுகள் : காரமான ஸ்பைசி உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் திருமணம் முடியும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும், ஏனெனில் காரமான உணவுகளும் உங்கள் வயிற்றுக்கு கோளாறு கொடுக்கும். எனவே திருமண சமயத்தில் எந்த உபாதைகளையும் தவிர்க்க இதைக் கடைபிடியுங்கள்.


பால் பொருட்கள் : பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ், யோகர்ட், தயிர் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை கொழுப்புச்சத்தை அதிகமாக்கும். அதோடு வயிற்று மந்தம் ஏற்படும்.


மது : உங்களுக்கு மதுப்பழக்கம் இருப்பின் அதை திருமணம் வரை தள்ளி வைத்தல் நல்லது. இதுவும் கலோரியை அதிகரிக்கும். வயிற்றுக்கு கோளாறு உண்டாக்கும்.


எண்ணெய் உணவுகள் : எண்ணெயில் பொறித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் போன்றவற்றையும் தவிருங்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது. அவை திருமண சமயத்தில் தேவையற்ற உடல்நல பாதிப்புகளை உண்டாக்கினால் டோட்டல் பிளானும் வேஸ்ட் ஆகிவிடும்.