மீன்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி பெறும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறையோடு செயல்படாமல் இருக்கும் போது தான் வயதிற்கேற்ற உடல் வளர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. எனவே பெற்றோர்கள் முதலில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்ன கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்பது குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் நம்முடைய குழந்தைகளுக்குத் தேவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.. குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளின் லிஸ்ட்:
மீன்: மூளை செயல்பாட்டிற்கு தேவையான ஓமேகா 3 கொழுப்புகள், அயோடின் மற்றும் துத்தநாகம் போன்றவை மீனில் அதிகளவில் உள்ளது. இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அவர்களின் மனநிலையை ஒழுங்குப்படுத்த முடிவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. எனவே வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு மீன் சாப்பிட கொடுத்து அவர்களுக்கு ஏற்படும் மன சோர்வைக் குறைக்கலாம். இதோடு குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.
நட்ஸ் வகைகள்: நட்ஸ் வகைகளில் அதிகளவு வைட்டமின் ஈ, துத்தநாகம், போலேட், இரும்பு மற்றும் புரதம் அதிகளவில் உள்ளதால், குழந்தைகளின் செயல்திறன் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மகிழ்ச்சியான ஹார்மோன்களான செரோடோனியும் சுரப்பதாக கூறப்படுதால் எப்போதும் குழந்தைகள் மகிழ்வோடும், உடல் ஆரோக்கியத்தோடும் இருக்க உதவியாக உள்ளது. எனவே மேற்கண்ட உணவுமுறைகளை உங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இனி மறக்காமல் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான உணவுகளை கொடுத்துவிடுங்கள்..