எலும்பு அடர்த்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க ஈஸ்ட்ரோஜன் அத்தியாவசியமானது. நம் உடலில் போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாதது நமது நல்வாழ்வை பாதிக்கலாம். மெனோபாஸ், பிசிஓஎஸ் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகள் காரணமாக நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறையலாம். ஆனால் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவை சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் மூலம் சரி செய்யலாம்.
குறைந்த ஈஸ்ட்ரோஜன் இருப்பதற்கான அறிகுறிகள்: பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி முக்கியமானது. குறைவான ஈஸ்ட்ரோஜன் லெவல் காரணமாக ஆண்களுக்கு கருவுறாமை, ஹாட் ஃப்ளாஷஸ் மற்றும் விறைப்பு கோளாறு உள்ளிட்ட சிக்கல் ஏற்படும்.தவிர குறைந்த ஈஸ்ட்ரோஜன் லெவல் காரணமாக தூக்க சுழற்சி, மனநிலை மற்றும் பாலியல் வாழ்க்கையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஈஸ்ட்ரோஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க உதவும் சில சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியல் இங்கே..
ஆளி விதைகள் : நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதற்கான சிறந்த மற்றும் இயற்கையான ஆதாரங்களில் ஒன்றாக இருக்கின்றன ஆளி விதைகள். இந்த சிறிய அளவிலான விதைகளில் நம்பமுடியாத அளவு லிக்னான்ஸ் (lignans) நிறைந்துள்ளன. lignans என்பவை ஈஸ்ட்ரோஜன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஒரு வகை பைட்டோ ஈஸ்ட்ரோஜனாகும். அதே நேரம் ஆளி விதைகளை தினசரி எடுத்து கொள்வது மாதவிடாய் நின்ற பெண்களுக்கானமார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் என்கின்றன ஆய்வுகள்.
சோயா தயாரிப்புகள் : சோயா தயாரிப்புகளில் பொதுவாக Isoflavones எனப்படும் சேர்மங்கள் உள்ளன, இவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும் ஒரு வகை பைட்டோஈஸ்ட்ரோஜன் ஆகும். உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால் உங்கள் டயட்டில் சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்க்கலாம்.
எள் விதைகள்: ஆளிவிதைகளைப் போலவே எள் விதைகளும் ஈஸ்ட்ரோஜன் லெவலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு லிக்னான்ஸ் உள்ளன. 100 கிராம் எள் விதைகளில் தோராயமாக 0.2 முதல் 0.5 கிராம் லிக்னான்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. எள் விதைகளை வழக்கமான் அடிப்படையில் சாப்பிடுவது போஸ்ட்மெனோபாஸ் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும்.
கொண்டைக்கடலை : கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் உண்மையில் பைட்டோஈஸ்ட்ரோஜன்ஸ்களின் நல்ல ஆதாரமாகும். உங்கள் டயட்டில் ஹம்முஸை (hummus) சேர்ப்பது ஈஸ்ட்ரோஜன் லெவலை அதிகரிக்க உதவும் இயற்கை வழியாகும். ஆய்வுகளின்படி ஹம்முஸ் 100 கிராமுக்கு 993 மைக்ரோகிராம் ஈஸ்ட்ரோஜனைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தவிர சிவப்பு பீன்ஸ், பச்சை பட்டாணி போன்ற பிற பருப்பு வகைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
பால் பொருட்கள்: முழு கொழுப்பு உள்ளடக்கம் உள்ள பால் பொருட்கள் இயற்கையாகவே சிறிய அளவு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரோனை கொண்டிருக்கும். உங்களது ஈஸ்ட்ரோஜன் லெவலை ஆதரிக்க டயட்டில் சீஸ், பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை வழக்கமான அடிப்படையில் சேர்த்து கொள்ளுங்கள். ஸ்கிம் மில்க்-உடன் ஒப்பிடும் போது ஹோல் மில்க்-ல் கொழுப்பில் கரையும் தன்மை கொண்ட ஈஸ்ட்ரோஜன், அதிக செறிவுகளில் காணப்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.