நடிகைகள் என்றாலே அழகு பதுமைகள் மட்டும் தான் என்ற நிலை எப்போதோ மாறி விட்டது. தற்பொழுது நடிகைகள் பல துறைகளில் பிசினஸ் செய்து வருகிறார்கள், பெரிய முதலீடு செய்கிறார்கள், தொழில் முனைவோராக வளர்ந்துள்ளார்கள், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள். பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக, பலரின் கனவுக் கன்னிகளாக வலம் வருபவர்களும் சாதாரண பெண்கள் தான். அதில், சிலருக்கு சமைப்பது மிகவும் விருப்பம். சமையல் கலையிலும் கை தேர்ந்த பாலிவுட் நடிகைகளைப் பற்றி, இங்கே பார்க்கலாம்!
பிரியாணியிலும், பேக்கிங்கிலும் தீபிகா படுகோனே கில்லாடி : தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்டா கெண்டைக்கால் அழகி தீபிகா படுகோனே, பாலிவுட் நடிகையாக மட்டுமன்றி, உலக அரங்கில் பிரபலமான மாடலும் கூட. உணவைப் பொறுத்தவரை காரசாரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம் தீபிகா. அது மட்டுமல்லாமல், பல விதமான உணவுகளை சமைத்துப் பார்க்க விருப்பம், அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்வார். குறிப்பாக, தனது காதல் கணவர் ரன்வீர் சிங்கிற்காக பிரியாணி செய்வதும், விதவிதமான கேக்ஸ் பேக் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆரோக்கிய உணவுகளின் அம்பாசடர் : பாலிவுட் நடிகை என்பதைக் கடந்து யோகா மற்றும் ஃபிட்னஸ் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருப்பதற்கு யோகா மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளும் தேவை என்பதை தனது யூடியூப் சேனல் வழியாக பலவிதமான உணவுகளை சமைத்து வெளியிடுவதன் மூலம் வலியுறுத்துகிறார். ஃபிரஷ்ஷான பொருட்களை வைத்து சமைப்பது ஷில்பா ஷெட்டிக்கு மிகவும் விருப்பமானது. குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தின்பண்டங்களை சமைப்பதில் கை தேர்ந்தவர்.
தென்னிந்திய இனிப்புகளை விரும்பி சாப்பிட மட்டுமல்லாமல், அற்புதமாக சமைப்பாராம் ஐஸ்வர்யா ராய் : உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த நபர்களில் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஒருவர். இவருக்கு தென்னிந்திய இனிப்பு வகைகளை சமைப்பது மிகவும் பிடித்தமானது என்று பலமுறை தெரிவித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தனது அம்மாவின் பூர்வீகமான மங்களூர் பாரம்பரிய உணவுகளை தன் குடும்பத்தினருக்கும் குழந்தைக்கும் சமைத்துக் கொடுப்பது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு உணவுகளை சமைப்பது நீனா குப்தாவின் ஹாபி : 70 மற்றும் 80 களில் பாலிவுட்டில் கோலோச்சிய நடிகைகளில் ஒருவரான நீனா குப்தா தலைப்பு செய்திகளில் இடம்பெற தவறியதே இல்லை! தன்னுடைய விருப்பங்களை பற்றி மிக வெளிப்படையாக பேசும் நீனா ஒரு உணவுப் பிரியர் என்பதை பலமுறை கூறியிருக்கிறார். ஊரடங்கு நேரத்தில் விதவிதமாக சமைத்து தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் விஷுவல் விருந்து வைத்திருக்கிறார்! ஆரோக்கிய உணவுகளை தவிர்த்து பேக்கிங் செய்வது மற்றும் வெளிநாட்டு உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சமைத்துப் பார்ப்பது இவருடைய ஹாபியாகவே மாறியுள்ளது.
வீட்டு உணவு முதல் மாடர்ன் பேக்கிங் வரை : வட இந்திய பாரம்பரிய உணவானதால் டால் சாவல் முதல் சாக்கோ லாவா கேக்க வரை உணவு என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் கேட்டகிரியை சேர்ந்தவர் 90 களின் கனவுகன்னி கரிஷ்மா கபூர். வீட்டில் சமைத்த உணவை மிகவும் விரும்புபவர். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையும், விதவிதமான கேக்ஸ் செய்து தருவதையும் விரும்பிச் செய்வாராம்.