ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அதிக நீர் சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.

 • 15

  பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

  பழங்கள் இயற்கையின் மிக முக்கிய வரப்பிரசாதமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்களின் காரணத்தால் இது ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. பழங்களில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, "பலர் தவறாகப் பழங்களை சாப்பிடுகிறார்கள். இதை சரி செய்யப்படாவிட்டால் நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும்." என்று கூறுகின்றனர். எனவே, இந்த பதிவில் பழங்களை சாப்பிடும்போது ஒருவர் செய்யும் தவறுககளை பற்றி காணலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

  பழங்களை வேறு ஒன்றுடன் இணைத்தல் : பழங்கள் மற்ற உணவை விட வேகமாக உடைந்து விடும் தன்மை கொண்டவை. எனவே, இதை மற்ற உணவுகளுடன் இணைத்தால், அமா எனப்படும் நச்சுகள் உடலில் உருவாகும்.மேலும், இது செரிமானத்தை மெதுவாக்கும் என்பதே இதற்குக் காரணம். கனமான உணவு ஜீரணிக்க எடுக்கும் வரை பழங்கள் வயிற்றிலேயே இருக்க வேண்டும், இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்குகிறது. இது செரிமான சாறுகளில் நொதிக்கத் தொடங்குகிறது, இது பொதுவாக நச்சுத்தன்மையுடையதாகவும், மற்றும் பிற சுகாதார நிலைமைகளின் சாத்தியத்தையும் அதிகரிக்கலாம். எனவே பழங்களை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை விடவும் தனித்தனியாக சாப்பிடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 35

  பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

  இரவு நேரத்தில் பழங்கள் : படுக்கைக்குச் செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் எதையும் தவிர்ப்பது நல்லது. இது பழத்திற்கும் பொருந்தும். படுக்கைக்கு முன் பழங்களை உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், இது நிறைய சர்க்கரையை வெளியிடுகிறது. இது உடல் ஓய்வெடுக்கும் போது ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதனால் இரவில், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. மேலும், பழங்களை இரவில் தாமதமாக சாப்பிடுவது அசிடிட்டி போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, பழங்களை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாமே தவிர, அதற்குப் பிறகு சாப்பிடுவது நல்லதல்ல.

  MORE
  GALLERIES

 • 45

  பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

  உடனடியாக தண்ணீர் குடிப்பது : குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்க செய்வார்கள். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பின் pH அளவு சமநிலையற்றதாக மாறும், குறிப்பாக தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அதிக நீர் சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால், நிறைய தண்ணீர் உள்ள பழங்கள் உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் pH சமநிலையை மாற்றும். இது வயிற்றுப்போக்கு அல்லது காலரா போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 55

  பழங்களை சாப்பிடும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இதுதான்..!

  பழத்தின் தோல் : வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் என்று வரும்போது, பழத்தின் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ஆப்பிள் பழத்தின் தோலில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. எனவே, தோலை உண்பது கூட உங்கள் உடல் பருமன் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கு உதவலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

  MORE
  GALLERIES