புத்தாண்டு பிறந்து விட்டால் போதும். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு உறுதிமொழியை ஏற்றுக் கொள்வார்கள். பெரும்பாலும் அவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. ஆனால், ஆண்டு தவறாமல் நம் மக்கள் பலரும் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்று உடல் எடை குறைப்பு நடவடிக்கையாகும். ஆரோக்கியமற்ற உணவுகளை குறைத்து, உடல் பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக் கொள்வார்கள்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் பல உத்திகளை கையாளுகின்ற போதிலும், பானங்கள் மூலமாக சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது பலரும் அறியாத தகவலாக உள்ளது. உடல் எடை குறைப்பு இலக்கை அடைவதற்கு பல விதமான பானங்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால், பானங்கள் என்ற பெயரில் நிறையூட்டப்பட்ட சர்க்கரை சேர்த்த பானங்கள், பேக்கிங் செய்யப்பட்ட குளிர் பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடல் பருமன் ஏற்படும்.
பிளாக் டீ : இதுவும் க்ரீன் டீ போல ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொண்டவை தான். குறிப்பாக, உடல் பருமனை குறைக்க உதவுகின்ற பாலிஃபினால்ஸ் பிளாக் டீயில் உள்ளன. மேலும் இது கொழுப்பு மற்றும் கலோரிகளை கரைக்கிறது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு தினசரி 3 கப் அளவு பிளாக் டீ குடித்து வந்தால் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இளநீர் : இயற்கையாகவே கிடைக்கக் கூடிய அருமையான பானம் இது. இளநீர் இனிப்பு சுவை கொண்டது என்றாலும் அதில் கலோரிகள் மிக, மிக குறைவு. இதில் உள்ள விட்டமின் சி மற்றும் மேங்கனீஸ் போன்ற விட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்றவை நாம் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எல்க்ட்ரோலைட்டுகள் உடலுக்கு கிடைக்கும்.
பிளாக் காஃபி : வர காஃபி என்ற சொல் தமிழ் பாரம்பரியத்தில் மிக பிரபலமான ஒன்று. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால், தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் என்றால் உடனடியாக வர காஃபி தான் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பிளாக் காஃபியை தினசரி 4 கப் குடித்து வந்தால் நம் உடல் எடை குறையும்.