அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு புரதச்சத்தை பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் உட்கொள்ளும் இறைச்சியிலேயே அவர்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இந்த விஷயம் சற்று சிக்கலானது. ஏனெனில் இறைச்சியில் இருக்கும் அளவிற்கு தேவையான புரதச்சத்து சைவ உணவு வகைகளில் கிடைப்பது கடினம். ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தினசரி உட்கொள்வதின் மூலம் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை நம்மால் பெற முடியும்.
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நன்றாக இயங்குவதற்கும் புரதச்சத்து மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உடல் இயங்குவதற்கு ஆற்றலை கொடுத்து, நம்முடைய எலும்புகளுக்கு வலுவூட்டி உடல் வலுவானதாக இருக்க உதவுகிறது. உண்மையில் அசைவ உணவு வகைகளைப் போலவே சைவ உணவிலும் புரதங்கள் நிறைந்த உணவு வகைகள் உள்ளன. ஆனால் நமக்கு தான் அதை பற்றி சரியாக தெரிவதில்லை. எனவே இறைச்சியில் உள்ள அளவிற்கு சைவ உணவில் புரதம் நிறைந்துள்ள உணவு வகைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
முட்டை : முட்டை எப்போதுமே சைவ உணவு பிரியர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. மருத்துவர் ஒருவரின் அறிவுரைப்படி 6 g அளவிலான முட்டைகளை எடுத்துக் கொண்டாலே உடலுக்கு தேவையான புரதச்சத்து நமக்கு கிடைத்துவிடும். மேலும் முட்டையை நாம் பலவிதமாக சமைத்தும் உட்கொள்ள முடியும் என்பதும் ஒரு கூடுதல் நன்மை.
பீனட் பட்டர் : பீனட் பட்டர் மிகவும் சுவையான புரதச்சத்து நிறைந்த ஒரு சைவ உணவாகும். இதனையும் நம் பல்வேறு விதமான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் அதாவது 8 கிராம் பீனட் பட்டர் உணவில் சேர்த்துக் கொண்டாலே உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் நமக்கு கிடைத்து விடும்.
சுண்டல் : சுண்டலும் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து தரும் சைவ உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் சுண்டல் உட்கொண்டாலே உடலுக்கு தேவையான புரதசத்து நமக்கு கிடைத்து விடும். வெறும் சுண்டல் மட்டும் சாப்பிடாமல் சாலட் அல்லது மற்ற உணவு வகைகளோடு சேர்த்தும் இதனை உட்கொள்ளலாம்.
பால் : பாலில் மற்ற சத்துக்களுடன் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தும் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்க 4 oz அளவிலான பால் உட்கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களுடன் அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாலை வெறுமனே குடிக்க உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் ஸ்மூத்தீஸ், மில்க் ஷேக் அல்லது மற்றும் பல உணவு வகைகளோடு சேர்த்து அதனை உட்கொள்ளலாம். குளிர் காலங்களில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
விதைகள் : உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் பல்வேறு விதைகள் தினசரி நம் சமையல் அறையிலேயே கூட கிடைக்கும். அவற்றில் புரதங்கள் மட்டுமின்றி நன்மை செய்யக்கூடிய கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவையும் நிறைந்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு விதைகளை உட்கொண்டாலே உடலுக்கு தேவையான புரதசத்து நமக்கு கிடைத்து விடும்.