கொலஸ்ட்ராலை ஒயின் குறைப்பது எப்படி? பொதுவாக ஒயின் என்பது திராட்சை பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். திராட்சை பழங்களில் உள்ள பாலிபினால்ஸ் நம் கொலஸ்ட்ரால் கட்டமைப்புகளை உடைக்க கூடியதாகும். இத்துடன் ஒயினில் சேர்க்கப்பட்டுள்ள லவங்கப்பட்டையானது நமது உடலில் உள்ள அலர்ஜி மற்றும் வீக்கம் ஆகியவற்றை இயல்பாகவே குறைக்க கூடியதாகும்.
எச்சரிக்கை மிக அவசியம் : ஒயின் எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது மற்றும் கொலஸ்ட்ரால் குறைகிறது என்ற பலன் கிடைத்தாலும் கூட, இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் மிகுதியான அளவில் ஒயின் எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு அடுத்த நாள் காலையில் தலைவலி உண்டாகக்கூடும் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கக்கூடும். இது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக ஒயின் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.