முகப்பு » புகைப்பட செய்தி » Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

நீங்கள் மிகவும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்போ வெல்லம் மற்றும் அதன் தண்ணீரை குடித்து பாருங்கள்.. வெல்லம் மற்றும் வெதுவெதுப்பான நீர் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

 • 18

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்லது: வெல்லம் பயன்படுத்தும் நடைமுறை ஆயுர்வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக, வெல்லத்தை சுவைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  உடல் ஆரோக்கியத்திற்கு: குளிர்காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம். உங்கள் வழக்கமான உணவு பழக்கங்களைல் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் உடலை மேம்படுத்தலாம். இதற்கு உங்கள் உணவில் வெல்லம் சேர்க்கவும். மேலும் தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 38

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  மூட்டு வலியைப் போக்கும்: தொடர்ந்து வெல்லம் சாப்பிடுவதால் எலும்புகளை வலுவாக்கும், மூட்டு வலியைப் போக்கும், மூட்டுவலி போன்ற எலும்பு நோய்களைக் குணப்படுத்தி உடலை அமைதிப்படுத்தும். இதில் அதிக பொட்டாசியம் மற்றும் சோடியம் இருப்பதால், வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கலந்து சாப்பிடுவது உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  உடல் உருப்புகள் சுத்தமாக இருக்க: வெல்லம் உடலை சுத்தப்படுத்த உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. குறைந்த அளவு வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தொடர்ந்து குடித்து வந்தால், உங்கள் சரும ஆரோக்கியம் மேம்படும். உடல் ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் இருக்கும். ஏனெனில் இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  சோர்வு ஏற்படாமல் இருக்க: உடல் எடை இழப்புக்குப் பிறகு சோர்வு ஏற்படும். வெல்லம் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. உங்கள் உடலின் தசைகளை வளர்க்கும் மற்றும் உடல் சோர்வு நிலையை அடையாமல் பார்த்துக் கொள்கிறது.

  MORE
  GALLERIES

 • 68

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது : உங்கள் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், அதனை அதிகரிக்க வெல்லம் சிறந்தது. இதில் இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. வெந்நீருடன் வெல்லம் கலந்து குடிப்பது கர்ப்பிணிப் பெண்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 78

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்: வெல்லம் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த குளிர் காலத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வெல்ல நீர் அதிகரிக்கிறது. இது உடலை உடனடியாக ரீசார்ஜ் செய்கிறது. சோர்வை நீக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  Immunity Booster: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை குடியுங்கள்...

  இதில் மெக்னீசியம், வைட்டமின் பி1, பி6 மற்றும் சி நிறைந்துள்ளது. இதில் துத்தநாகம், ஆக்ஸிஜனேற்ற மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை காலையில் அல்லது தூங்கும் முன் குடிக்கலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்தவும் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES