எடை இழப்புக்கான டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள்முக்கியமானவை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.குறிப்பாக பழங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கவும், நிறைவாக உணர உதவுகின்றன.
தக்காளி : தக்காளி காய்கறி அல்ல பழங்களின் பட்டியலில் இருக்க வேண்டியவை. இந்த சிவப்பு நிற பழங்களில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. Leptin எனப்படும் புரதம் உடல் எடை குறைவதற்கு தடையாக இருக்கிறது. ஆனால் தக்காளி இந்த புரதத்தை எதிர்த்து போராடுகிறது. எடையை வேகமாக குறைக்க விரும்புவோருக்கு தக்காளி மிகவும் உதவுகிறது. கேன்ட் தக்காளி மற்றும் கெட்ச்அப் உள்ளிட்டவை உண்மையான தக்காளி அல்ல, அவை ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்தவை. இவை கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) : உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் ஃப்ரூட்டாக இருக்கும் அவகேடோவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ளன. எடை இழப்பு டயட்டில் அவகேடோ முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஹெல்தி ஃபேட்ஸ்களை பெறுவதில்லை. ஹெல்தி ஃபேட்ஸ்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட்டை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. எடை இழப்புடன் தொடர்புடைய முக்கிய ஹார்மோன்களில் ஒன்றான டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கிய கொழுப்புகள் அதிகரிக்கின்றன.
ஆரஞ்சு : சுவையான மற்றும் சத்தான பழங்களாக இருக்கும் ஆரஞ்சுகள் உடல் எடையை குறைக்க பயனுள்ள பழங்களாகும். இவை குறைந்த கலோரிகள் கொண்டவை. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் இவற்றில் நிறைந்துள்ளன. சருமம், குருத்தெலும்பு, தசைநாண்கள், ரத்த நாளங்கள் உள்ளிட்டவற்றின் முக்கிய திசுக்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
தர்பூசணி : எடை இழப்பு என்று வரும் போது தர்பூசணி ஒரு அற்புத பழம். இது குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது. பழத்தின் எடையில் சுமார் 90% நீர்ச்சத்து ஆகும். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது`. இந்த பழத்தில் தொப்பையை கரைக்க உதவும் Arginine எனப்படும் ஃபேட்-பர்னிங் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இதயம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது.
ஸ்ட்ராபெர்ரி : சுவையான மற்றும் சத்தான பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL-ன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் பழமான ஸ்ட்ராபெர்ரியிடமிருந்து அதிக நன்மைகளை பெற அவற்றை ஃப்ரூட் ஸ்மூத்திகளுடன் கலக்கலாம். தவிர தயிர் அல்லது ஓட்ஸ் கஞ்சியில் ஸ்ட்ராபெர்ரிக்களை சேர்க்கலாம்.
கொய்யாப்பழம் : ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வு. இவற்றில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் கொய்யாவில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் தடுப்பு மற்றும் தோல் அழற்சிக்கு உதவுகின்றன.
லைம் : லைம் (Lime ), லெமன் (Lemom ) ஆகிய இரண்டும் வெவ்வேறு ரக செடி இனங்கள் என்றாலும் நாம் இவற்றை எலுமிச்சை என்ற பொதுவான பெயரில் தான் அழைக்கிறோம். லைம் பழத்தில் ஃபிளாவனாய்ட்ஸ், லிமோனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. எடை இழப்புக்கு உதவும் டிடாக்ஸ் ட்ரிங்ஸ்களுக்கு லைம் சிறந்த மூலப்பொருளாக உள்ளது. உகந்த வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.
லெமன் : லைமின் மூத்த சகோதரர் என்று லெமனை குறிப்பிடலாம். இது எடை இழப்புக்கு உதவும் சிறந்த பழமாகும். ஒரு லெமன் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி முழுவதையும் பூர்த்தி செய்ய கூடியது. வளர்சிதை மாற்ற விகிதத்தை சிறந்த விகிதத்தில் பராமரிக்க உதவுகிறது. இவற்றில் நிறைந்திருக்கும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
பேரிக்காய் : ஒரு பேரிக்காயானது உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 24%-ஐ பூர்த்தி செய்யும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேரிக்காய் சாப்பிடும் பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் குவியும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன. இது கொலஸ்ட்ரால் இல்லாதது, இதில் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. மீடியம் சைஸ் பேரிக்காய் 100 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.