முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

மிக அதிகப்படியான கலோரிகளும், ஊட்டச்சத்துக்களும் கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உடல் எடையை குறைக்க அவை பலன் தாரது. அந்தப் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

 • 112

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  உடல் பருமன், அதிகப்படியான உடல் எடை போன்றவை இன்றைய தலைமுறையினரின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதுவே அனேக நோய்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. ஆகவே, உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் தேவையை இன்று பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 212

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  உடல் எடை குறைப்புக்கு காய்கறிகள் பலன் அளிக்குமா?
  நிச்சயமாக பலன் அளிக்கும். ஏனென்றால் காய்கறிகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதில் கலோரிகள் குறைவுதான். எனினும், சில வகை காய்கறிகள் உடல் எடை குறைப்புக்கு பெரிய அளவுக்கு உதவாது. எதை சாப்பிடலாம், எது பலன் தராது என்பதை இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 312

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  பாலக்கீரை : கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இந்த கீரையானது காலி இடங்களில் ஏராளமாக வளர்ந்து நிற்பதை பார்க்க முடியும். இப்போது நகரங்களிலும் விற்பனைக்கு வருகிறது. செரிமான சக்தியை மேம்படுத்தும். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும். இது உடல் எடையை குறைக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 412

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  ப்ரோக்கோலி : ப்ரோக்கோலியில் கரோடினாய்ட்ஸ் என்னும் இயற்கையான வேதிப்பொருள் உள்ளது. அது நம் உடலில் உள்ள கொழுப்பு கரைய உதவியாக இருக்கும். இதன் எதிரொலியாக உடல் எடை குறையும். நம் வீட்டு தோட்டங்களில் இது விளையாது. கடைகளில் மட்டுமே வாங்கியாக வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 512

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  முட்டைக்கோசு : மலைப் பகுதிகள் மற்றும் மலையோர கிராமங்களில் விளையக் கூடிய காய்கறி இதுவாகும். 100 கிராம் முட்டைக்கோசில் 25 கலோரிகள் மட்டுமே இருக்கும். முழுவதும் நீர்ச்சத்து நிரம்பிய இந்த காய்கறி உடல் எடையை குறைக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 612

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  காளிஃபிளவர் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இது. 100 கிராம் அளவுக்கான காளிஃபிளவரில் 27 கலோரிகள் உள்ளன. இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும் மற்றும் பசி கட்டுக்குள் வரும். உடல் எடை குறைப்புக்கு இதை சேர்த்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 712

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  கேரட் : பார்த்ததுமே சாப்பிடத் தோன்றுகின்ற, கண்ணை பறிக்கும் காய்கறில் ஒன்றுதான் கேரட். பச்சையாகவும் சாப்பிடலாம். நிறைவான ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் நிரம்பிய இதனை உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 812

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  காளான் : மிக அதிகப்படியான நீர்ச்சத்து கொண்ட காளான், நம் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை வாரம் ஒருமுறை தங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 912

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  தவிர்க்க வேண்டிய காய்கறிகள் : மிக அதிகப்படியான கலோரிகளும், ஊட்டச்சத்துக்களும் கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உடல் எடையை குறைக்க அவை பலன் தாரது. அந்தப் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1012

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  மக்காச்சோளம் : தியேட்டர்களில் தவறாமல் வாங்கி உண்ணும் ஸ்நாக்ஸ் பாப்கார்ன் ஆகும். அதேபோல சாலையோர கடைகளில் அவித்த சோளத்தை வாங்கி சாப்பிடுவதிலும் அலாதி பிரியம் எல்லோருக்கும் உண்டு. ஆனால், உடல் எடையை குறைக்க நினைத்தால் இதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உடல் எடை அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 1112

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  பட்டாணி : பட்டாணியில் மிகுதியான புரதச்சத்து கிடைக்கும். ஆனால், செரிமானத்திற்கு கடினமான காம்ப்ளெக்ஸ் சர்க்கரை இதில் உள்ளது. மேலும் வாயுத்தொல்லையை அதிகரிக்கும். உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் இதை தினசரி சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 1212

  உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

  உருளைக்கிழங்கு : ஸ்டார்ச் சத்து நிரம்பிய உருளைக்கிழங்கு நம் ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் உடல் எடையை அதிகரிக்கும் காய்கறிகளில் இது மிக முக்கியமானது. அதே சமயம், வளர் இளம் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் தினசரி ஒரு கிழங்கு சாப்பிட கொடுக்கலாம்.

  MORE
  GALLERIES