உண்மையில் எண்ணெயை அளவாக எடுத்து கொண்டால் உடலுக்கு பல நேர்மறை விளைவுகளை தருகிறது. அதே போல நிறைவுற்ற கொழுப்பு (saturated fat), ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு போன்ற ஆரோக்கியமற்ற எண்ணெய்கள் உடலுக்கு தீமைகளை ஏற்படுத்துவதோடு கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் மற்றும் இதயம் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஒருவர் தனது எடை இழப்பு பயணத்தை திட்டமிடும் போது எண்ணெயை முழுவதுமாக டயட்டில் இருந்து விலக்கி விடாமல், ஆரோக்கியமான எண்ணெய்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
ஆலிவ் ஆயில் :ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் மற்றும் மீடியம் செயின் ட்ரைகிளிசரைட்ஸ் உள்ளிட்டவை ஹை கொலஸ்ட்ரால் அபாயத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. தவிர வெயிட் மேனேஜ்மென்ட்டிற்கும் உதவுகின்றன. ஆலிவ் ஆயிலை ரா ஃபார்மில் சாலட் டிரஸ்ஸிங்காகப் பயன்படுத்தலாம் மற்றும் சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய வைட்டமினான வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் :தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்க மட்டுமல்ல சமையலுக்கும் பயன்படுத்தலாம் என்பது நமக்கு தெரியும். ஆனால் பரவலாக இன்னும் பயன்படுத்தப்படவில்லை. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு நீண்ட நேரம் பசியின்றி முழுதாக உணர வைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. எடை இழப்புக்கு தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல எண்ணெய்யா என்பது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், எண்ணெய்யில் இருக்கும் கலவை அதை சிறந்த எண்ணெய் என்ற தகுதிக்கு உள்ளாக்குகிறது. இந்த ஆயிலில் லாங் செயின் மற்றும் மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் உள்ளது, இவை வெவ்வேறு எண்ணெய்கள் உடலில் எந்த விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை தீர்மானிக்கிறது. லாங் செயின் ஃபேட்டி ஆசிட் செய்வது போல் மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட்ஸ் பிளட் கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிக்காது.
எள் எண்ணெய் : எள் எண்ணெய் எடை இழப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ஆயிலில் செசாமால் மற்றும் செசமினோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு எள் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதில் எள் எண்ணெய் முக்கியபங்கு வகிக்கிறது. எள் எண்ணெய்யில் ஏராளமாக உள்ள டிரிப்டோபான் மற்றும் பாலிபினால்ஸ் ஆகிய 2 சக்திவாய்ந்த அமினோ ஆசிட்ஸ் எடை இழப்புக்கு உதவுகின்றன.
சாஃப்ளார் ஆயில் (Safflower oil) : Safflower oil ஆரோக்கியமான எண்ணெய் ஆகும். Safflower என்பது காட்டு குங்குமப்பூ அல்லது குசம்பப்பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தாவர விதைகளிலிருந்து பெறப்படும் ஆயில் Safflower oil ஆகும். வெயிட் மேனேஜ்மென்டிற்கு இந்த ஆயில் உதவுவதோடு வீக்கம், ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இது மார்க்கெட்டில் மிகவும் மலிவாக மற்றும் எளிதில் கிடைக்க கூடிய எண்ணெய்களில் ஒன்றாகும்.
நீங்கள் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் மீன் எண்ணெய், ஆளி எண்ணெய், பாமாயில் மற்றும் வால்நட் ஆயில் போன்ற எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆயில்கள் அதிக கலோரி கொண்டவை மற்றும் பெரும்பாலும் லோ ஸ்மோக்கிங் பாயின்ட்ஸ்களை கொண்டுள்ளன. எப்போதும் அதிக வெப்பநிலையை தாங்க கூடிய ஆயில்களை தேர்ந்தெடுப்பது முக்கியம்.