ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

நீங்கள் ஏதேனும் மருந்து அல்லது சிகிச்சையை மேற்கொண்டால், அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

 • 110

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  அத்திப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான பழம் சூப்பர் ஜூசி மற்றும் நிறைய முறுமுறுப்பான விதைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த அத்திப்பழங்கள் அதிக சத்தானவை மற்றும் அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்த பழம் மருத்துவர்களால் எப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன. கடைகளில் இவை உலர்ந்த பழங்களாக கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் அவற்றை உலர்பழங்களாக சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா?

  MORE
  GALLERIES

 • 210

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த சாப்பிட்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், நமது உடலால் அதன் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச முடியும் என்று கூறப்படுகிறது. அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதால் அவை செரிமானத்தை அதிகரிக்கும் என்று எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் டயட்டீசியன் ஒருவர் பகிர்ந்து கொண்டார். எனவே தினசரி சுமார் 2 அல்லது 3 உலர்ந்த அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றை நீங்கள் காலையில் உட்கொள்ளலாம். அத்திப்பழங்களை ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நீங்கள் காட்டாயம் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 310

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  மலச்சிக்கலைத் தடுக்கிறது: இன்று நம்மில் பலர் எதிர்கொள்ளும் செரிமான கோளாறுகளில் ஒன்று மலச்சிக்கல். காலையில் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற எந்தவொரு பிரச்சினையையும் தடுக்கிறது. தினசரி அத்திப்பழங்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல், செரிமானப் பிரச்சினையைத் தடுக்க நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிரம்பிய ஆரோக்கியமான உணவையும் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 410

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  உடல் எடையை குறைக்க உதவுகிறது: காலையில் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக உணர வைக்கிறது. நாள் முழுவதும் உங்கள் பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும் மற்றும் இது அதிக கலோரிகள் உட்கொள்வதைத் தடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 510

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது. அத்திப்பழங்களில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழங்களில் பொட்டாசியம் இருப்பதால், அவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 610

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைட்களைக் குறைக்க அத்திப்பழம் உதவுகிறது. அவை கொழுப்புத் துகள்கள் என்று கூறப்படுகின்றன. இவை இரத்த நாளங்களில் ஒட்டிக்கொள்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றன. இந்த கொழுப்பு துகள்களை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பெற ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 710

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  வலுவான எலும்புகளைத் தருகிறது: நிறைய பெண்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் காட்டாயம் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழம் பொட்டாசியம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். அத்திப்பழங்களை சாப்பிடுவது கட்டாயம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.

  MORE
  GALLERIES

 • 810

 • 910

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது: அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் உட்கொள்வது மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 1010

  உடல் எடையை குறைப்பு முதல்... மலச்சிக்கல் வரை..! அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  அத்திப்பழங்கள் அதிக சத்தானவை மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், நீங்கள் ஏதேனும் மருந்து அல்லது சிகிச்சையை மேற்கொண்டால், அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES