முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

Puliyarai keerai | மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.

  • 15

    வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

    புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் மருத்துவ குணம் நிறைந்தது. அதனால் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்று வள்ளலார் அன்றே சொல்லியுள்ளார். இந்த பதிவில் புளியாரை கீரையின் பயன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

    புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.

    MORE
    GALLERIES

  • 35

    வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

    புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். மேலும் இதனுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

    MORE
    GALLERIES

  • 45

    வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

    புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும். அத்துடன் இந்த கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.

    MORE
    GALLERIES

  • 55

    வள்ளலார் சொன்ன புளியாரை கீரை பற்றி தெரியுமா?

    புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும். இதில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES