பிங்க் நிறத்தில் முட்டை வடிவத்தில் இருக்கும் லிச்சி பழம் கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் பழமாக உள்ளது. இதன் உட்புறத்தில் வெள்ளை ஜெல் போன்ற கூழ் பகுதி காணப்படுகிறது. சாப்பிடவும் மிகவும் இனிப்பாக இருக்கும். கோடை கால பழமான இது தோல் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.
வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் பி 1, பி 2, பி 3, பி 6 வரையிலான வைட்டமின்கள், வைர்ரிபோஃப்ளேவின், தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த பழம் நீர்ச்சத்து நிறைந்தது, கோடை காலத்தில் அதிக தண்ணீர் தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, நீரேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தனை நன்மைகள் கொண்ட இந்த பழத்தை கோடை சீசனில் ஏன் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கியமான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சருமத்திற்கு நன்மை தரும்: லிச்சி பழத்தில் வைட்டமின் சி உள்ளது, இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயதான அறிகுறிகள் தோன்றுவதை தடுக்கவும் உதவுகிறது. தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற பற்றாக்குறையால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை தடுக்க பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
2.ரத்த அழுத்தத்தை பராமரிக்கும்: சுவைமிகுந்த லிச்சி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, இது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாசியம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் லிச்சி பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
5. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: உடலுக்கு எவ்வித நோயும் வராமல் தடுக்க நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. லிச்சி பழத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதைக் காணலாம். ஏனெனில் லிச்சி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது, அது வலுமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.