மற்ற பருவநிலைகளை விட குளிர் காலத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். நோய் கிருமிகள் குளிர் காலங்களில் அதிக அளவில் உண்டாக கூடும். எனவே நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்மிடம் எந்த நோய்களையும் அண்டாமல் பார்த்து கொள்ளும். அந்த வகையில் குளிர்காலங்களில் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சளி மற்றும் இரும்பல் : அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீனில் நிறைந்துள்ளன. குளிர்காலங்களில் மீன் சாப்பிட்டு வருவதால் நுரையீரலின் மூச்சு குழாய் பாதையில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் நுரையீரல் பகுதியில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே உங்களுக்கு ஏற்படும் சளி மற்றும் இரும்பலை தடுக்கும்.
பக்கவாதம் : பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும். எனவே பக்கவாதத்தின் பாதிப்புகளை குறைக்க உதவும்.