முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

Cinnamon Health Benefits : இந்திய சமையலறையில் எக்கச்சக்க மசாலாப் பொருட்கள் உள்ளன. அவை உணவின் சுவைக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மசாலாப் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று.

 • 19

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  இந்திய சமையலறையில் பல வகையான மசாலாப்பொருட்கள் உள்ளது. அவை அனைத்தும் உணவின் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி அதிக ஆரோக்கியம் நிறைந்த மசாலாப் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. இலவங்கப்பட்டை பொதுவாக சமையலில் மனம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது பல நோய்களில் இருந்து தன்னைத்தானே காத்துக் கொள்கிறது.

  MORE
  GALLERIES

 • 29

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  இலவங்கப்பட்டையை உட்கொள்வது எடையைக் குறைப்பதில் இருந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது வரை அனைத்திற்கும் உதவும். குறிப்பாக, ஆண்களுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. அசைவ சமையல் மட்டுமல்லாமல், சைவம் சார்ந்த சமையல்களில் நாம் அவ்வபோது பயன்படுத்தும் இலவங்கப் பட்டை ஆண்களுக்கு மகத்தான பலன்களை கொடுக்கக் கூடியவை.

  MORE
  GALLERIES

 • 39

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  இலவங்கப்பட்டையை அப்படியே நேரடியாகவோ அல்லது தூள் செய்தோ சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். பல நாடுகளில் இலவங்கப் பட்டை விளைகிறது என்றாலும் கூட, சிலோன் லவங்கம் எனப்படும் இலங்கையில் விளையும் பட்டை தனித்துவமான சுவை மற்றும் மணம் ஆகியவற்றைக் கொண்டது ஆகும்.

  MORE
  GALLERIES

 • 49

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  இலவங்கப் பட்டையின் சத்துகள் : இலவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க், விட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 59

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  மேலும், அதிக ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்து கொண்ட இலவங்கப் பட்டை, உடலில் சேரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது. எனினும், இலவங்கப் பட்டை அதிக சூடு மற்றும் காரத்தன்மை கொண்டது என்பதையும், இதை மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 69

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  ஆண்களுக்கு பலன் கொடுக்கும் இலவங்கப் பட்டை : விறைப்புத்தன்மை குறைபாடு கொண்ட ஆண்களுக்கு இலவங்கப் பட்டை நல்ல பலன் கொடுக்க கூடியதாகும். இரவு தூங்கும் முன்பாக இலவங்கப் பட்டையை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம்.

  MORE
  GALLERIES

 • 79

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  ஆண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும். பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்க தூள் கலந்து சாப்பிடலாம். இது தவிர சாலட், ஜூஸ், தயிர், காய்கறிகள் அல்லது சூப் ஆகியவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாகவோ அல்லது ஆற்றல் குறைந்தவராகவோ உணர்ந்தால், தொடர்ந்து இலவங்கம் எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 89

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  நீரிழிவு கட்டுப்பாடு : உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருந்தால், இலவங்கத் தூள் கலந்த பால் அல்லது டீ அருந்துவதன் மூலமாக உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இலவங்கப் பேஸ்ட் செய்து, முடியில் தேய்த்துக் குளித்தால் முடி அடர்த்தியாகவும், வலுவானதாகவும் வளரும்.

  MORE
  GALLERIES

 • 99

  இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

  சரும நலனுக்கு நல்லது : இலவங்கப் பட்டையை பயன்படுத்தி வந்தால், சருமம் சார்ந்த நோய்களை விரட்டியடிக்கலாம். முகப்பரு இருக்கும் இடங்களில், தேனில் கலந்து இலவங்கப் பொடியை தேய்த்தால் அவை சிறிது நாட்களில் மறைந்து விடும். மிக நீண்ட காலத்துக்கு உங்களை இளமையானவராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவிகரமாக இருக்கும்.

  MORE
  GALLERIES