மனித இயல்பானது வயது செல்ல செல்ல மனதில் பயத்தையும் , பதட்டத்தையும் உண்டாக்கும். குறிப்பாக உடல் நலன் சார்ந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வைக்கும். அதனால்தான் 30-ஐ கடந்த எவருக்கும் உடல் நலன் சார்ந்த எந்த மருத்துவ செய்தியும் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் உலகளாவிய பிரபலமாக இருக்கும் வெயிட் லாஸ் நிபுணர் மற்றும் மருத்துவர் மைக்கேல் மோஸ்லே பகிர்ந்து கொண்ட செய்தி பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அவர் தன்னுடைய செய்தி குறிப்பில் உங்கள் மூளையின் திறன் மங்குவதை தடுக்கும் ஆற்றல் காய்கறிகளில் உண்டெனில் அதில் முக்கிய பங்கு பீட்ரூட்டிற்கு உள்ளது என்று கூறியுள்ளார். இது மூளையில் வளர்ச்சி, அதன் ஆற்றல் திறன் அனைத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வயது செல்ல செல்ல குறையும் மூளையின் வேகத்தை தடுக்க முடியும் என்கிறார்.
பீட்ரூட் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெற முடியும் என்றாலும், அறிவாற்றல் வளர்ச்சிக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "பீட்ரூட் உடல் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது, மேலும் வேகமான மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்திற்கும் உதவுகிது" என்று அவர் பகிர்ந்து கொண்டார். மூளை திறன் என்பது மனதையும் சேர்த்தே குறிக்கிறது என்கிறார். அதாவது மூளை ஆக்டிவாக இருக்கும்போது நேர்மறையான சிந்தனைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் மனதிலும் பிரதிபளிப்பதாகக் கூறுகிறார்.
பீட்ரூட் சாறு குடிப்பதால் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸில் இரத்த ஓட்டம் மேம்படும், இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று ஒரு சுவாரஸ்யமான ஆய்வில் தான் படித்ததாக மருத்துவர் பகிர்ந்து கொண்டார். பீட்ரூட் நைட்ரேட்டுகளால் நிரம்பியுள்ளது, இது அதன் மந்திர பண்புகளுக்குப் பின்னால் உள்ள ஒரு பெரிய ரகசியம் என்றும் குறிப்பிடுகிறார். எனவே உங்கள் தினசரி உணவில் பீட்ரூட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.