இந்தியா முழுவதும் மிக எளிதில் கிடைக்கும் பழம் தான் வாழைப்பழம். எளிதில் கிடைக்கிறது என்றாலும், இதன் அற்புதமான மருத்துவ குணங்களை சாதாரணமாக எடைபோட்டு விடக்கூடாது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நம்மை நாள்முழுக்க உற்சாகத்துடன் வைத்திருக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வைட்டமின் பி 6, சி, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் வாழைப்பழங்கள் நிரம்பியுள்ளன.
இது செரிமானத்திற்கும் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் சிறந்தது. வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் சோடியத்தின் மோசமான விளைவுகளை தடுக்க உதவுகிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதுதவிர, நம்மை நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. மேலும், நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது மற்றும் ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதும் உங்கள் எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
டி.கே. பப்ளிஷிங் ஹவுஸின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகத்தின்படி, வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உப்பு அதிகம் உள்ள ஒரு பொதுவான உணவோடு தொடர்புடைய சிறுநீர் கால்சிய இழப்பைக் குறைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ப்ரீபயாடிக் சேர்மங்களும் உள்ளன. நாம் பெரும்பாலும் நம் குடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் ஆரோக்கியமான குடல் கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனை வாழைப்பழம் அதிகரிக்க உதவுகிறதாம். வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் முக்கியமானது. அந்த விஷயத்தை வாழைப்பழம் நமக்கு தருவதால் தினமும் காலை உங்கள் டயட்டில் வாழைப்பழம் சேர்த்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் வாழைப்பழங்களை ஜூஸ், சாலட் போன்று வித்தியமான முறையில் செய்து சாப்பிடலாம்.
1. வாழைப்பழம் மற்றும் வால்நட் ஸ்மூத்தி : உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்வதற்கான ஒரு ஆரோக்கியமான மிருதுவானது சிறந்த ட்ரிங்க் தான் இந்த ஸ்மூத்தி. இது, வைட்டமின் ஈ, சி, பி 6 ஆகியவை நிறைந்த ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும். இவை இரண்டு பொருட்களையும் யோகர்ட் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக பருகுவதால் வயிறு நிரம்பிய உணர்வு தோன்றும். விரத நாட்களில் இந்த பானத்தை காலையில் பருகுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
2. வாழைப்பழ பான்கேக் : ஒரு பவுலில் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், பால், பட்டைத் தூள் போட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதனை மாவுப் பதத்தில் கலக்கவும். உங்களுக்கு வேண்டுமானால் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். தவாவை மீடியம் சூட்டில் வைத்து, வெண்ணெய் போட்டு தேய்க்கவும். சின்ன சின்ன பான்கேக் அளவில் மாவை ஊற்றவும். இருபுறமும் வெண்ணெய் போட்டு பொன்னிற மாக வேக விட்டு எடுக்கவும். தட்டில் பான்கேக் வைத்து, தேன் ஊற்றி, ஆப்பிள் துண்டுகள் வைத்து பரிமாறலாம். நன்மைகள் ஏராளமாக கிடைக்கும்.
3. வாழைக்காய் பொரியல் : தென்னிந்திய உணவு வகைகளில் அதிகம் செய்யப்படும் ஒரு பொரியல். வாழைக்காயை ரவுண்டு ரவுண்டாக வெட்டி அதனை தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் அதனை வடிகட்ட வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி, வேகவைத்த வாழைக்காய்யை போட்டு 3 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
5. வாழைப்பழ தேங்காய் இட்லி : ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இநத் மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த இட்லி கொஞ்சம் இனிப்பாக இருந்தாலும், சத்துக்கள் ஏராளம்.