

வைரஸ் தொற்றுகளுடன் போராடி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலான உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் நல்லது. அப்படி எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்று பார்க்கலாம். ( image source : www.avogel.co.uk )


கேண்டி சாக்லெட் : அதிக சர்க்கரைக் கொண்ட கேண்டி சாக்லெட். இந்த பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உடலில் நோய் அழற்சியை உண்டாக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். எனவே கேண்டி சாக்லெட்டுகளை தவிர்த்தல் நல்லது.


சோடா : சோடா , சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை தவிர்த்தல் நல்லது. அதற்கு பதிலாக ஃபிரெஷ் பழங்களில் ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். ( image source : my post )


ஆல்கஹால் : ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே அளவுக்கு மீறிய ஆல்கஹாலை தவிருங்கள். ( image source : www.ucsf.edu )


வறுத்த உணவுகள் : எண்ணெய்யில் வறுத்த , பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.


ஃபாஸ்ட் ஃபுட் : பர்கர் , பீட்ஸா போன்ற ஃபாஸ்ட் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு தீங்கானது. இதற்கு வீட்டில் சமைக்கும் சோறு , குழம்பு என்ற நிறைவான உணவே போதுமானது.


சோடியம் : சோடியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ( image source : www.news-medical.net )


ஐஸ்கிரீம் : ஐஸ்கிரீமில் 6 மடங்கு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அது உடலுக்கு முற்றிலும் கெடுதல். எனவே அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தவிருங்கள்.


உருளைக்கிழங்கு சிப்ஸ் : உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரெஞ்சு ஃபிரைஸ் என உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறித்து, பதப்படுத்தி சமைக்கும் உருளைக்கிழங்கை சாப்பிடாதீர்கள்.