முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்..

 • 19

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  வாய்க்கு ருசியாக உண்ணும் அசைவ உணவுடன் சுவைக்காக ஏதேதோ உணவுகளைச் சேர்த்து உண்பது இன்றைக்கு வழக்கமாகி விட்டது. அசைவ உணவுடன் எதைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது? என்று இந்த தலைமுறையினர் யாருக்கும் தெரிவதில்லை... இந்த பதிவில் அது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..

  MORE
  GALLERIES

 • 29

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  தேன் : சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும்.

  MORE
  GALLERIES

 • 39

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  முள்ளங்கி : வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.

  MORE
  GALLERIES

 • 49

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  கிழங்கு வகைகள்: பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும்.  வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

  MORE
  GALLERIES

 • 59

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  மைதா உணவுகள்: பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும். அதனால் இறைச்சியோடு சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல...

  MORE
  GALLERIES

 • 69

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  பயறு:  முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.

  MORE
  GALLERIES

 • 79

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  கீரை: இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  MORE
  GALLERIES

 • 89

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  தயிர்: அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது.  கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.

  MORE
  GALLERIES

 • 99

  அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

  ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்: அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் , சோடா மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.

  MORE
  GALLERIES