நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அவசியம். அவை நாம் சாப்பிடும் தினசரி உணவுகளில் கிடைத்துவிடும் என்றாலும் அதை குறைக்கும் சில உணவுகளையும் நாம் தெரியாமல் தினமும் சாப்பிட்டுவிடுகிறோம் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைகிறது. எனவே அவை எந்தெந்த உணவுகள் என கவனமாக இருக்க மேலும் படியுங்கள்.
சர்க்கரை : அன்றாட உணவில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, நெக்ரோஸிஸ் ஆல்பா கட்டி , சி-ரியாக்டிவ் புரோட்டீன் மற்றும் இன்டர்லூகின்-6 போன்ற அழற்சி புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
உப்பு : அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும். சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும். உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி பெரியவர்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய அதிகபட்சம் ஐந்து கிராம் உப்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தோராயமாக ஒரு டீஸ்பூன் அளவாகும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் குளுக்கோகார்டிகாய்டு (glucocorticoid ) அளவு அதிகரிக்கும்.
எண்ணெயில் பொறித்த உணவுகள் : வறுத்த உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆய்வின்படி, வறுத்த உணவை சாப்பிடுவது கடுமையான இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உண்டாகும்.பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் அல்லது டீப் ஃபிரை செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவது ஆபத்து. எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது.