முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

பெரும்பாலான பழ வகைகளில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பல்வேறு மக்கள் பழச்சாறுகளை தயாரிக்கும் போது, அவற்றுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்துகின்றனர்.

 • 19

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  பொதுவாகவே நாம் சில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவற்றின் சுவையை அதிகரிப்பதற்கும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் சில மசாலாக்களையோ அல்லது சுவையூட்டிகளையோ பயன்படுத்துவது வழக்கமானது தான். ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது அவற்றில் சுவையூட்டிகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 29

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  குறிப்பாக நம்மில் பலரும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களோடு சர்க்கரை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அவை உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களோடு சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 39

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  பழ வகைகள்: பெரும்பாலான பழ வகைகளில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பல்வேறு மக்கள் பழச்சாறுகளை தயாரிக்கும் போது, அவற்றுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்துகின்றனர். இது பழங்களில் இயற்கையாக உள்ள சர்க்கரையுடன் கூடுதல் சர்க்கரையை சேர்ப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  பால் : பாலுடன் சர்க்கரையோ அல்லது வேறு சில ஊட்டச்சத்து பவுடர்களையும் சேர்ப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றுதான் என்றாலும், பாலுடன் சர்க்கரை சேர்க்காமல் பயன்படுத்தும் போது அது மிகப்பெரும் அளவில் நன்மைகளை அளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 59

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  காலை உணவில் சேர்க்கப்படும் தானியங்கள்: பெரும்பாலும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் தானிய வகைகளோடு பாலை சேர்த்து உட்கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் சேர்க்கும் பாலிலேயே மிக அதிக அளவில் சர்க்கரை ஏற்கனவே இருப்பதால் கூடுதலாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

  MORE
  GALLERIES

 • 69

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  பழ இனிப்புகள்: பழங்களை சேர்த்து தயாரிக்கும் இனிப்பு வகைகளை நீங்கள் விரும்பி உட்கொள்பவராக இருந்தால் முடிந்த அளவு அவற்றுடன் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அதிக அளவில் இனிப்பு சுவை தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவு பழங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான இனிப்பு சுவையை பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 79

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  காபி : பெரும்பாலான மக்கள் காபியுடன் சர்க்கரை சேர்த்து அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கும் போது அது பல்வேறு வித நன்மைகளை கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 89

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  சர்க்கரையானது மிகவும் மறைமுகமாக நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக நாம் உண்ணும் பல உணவு வகைகளில் ஏற்கனவே மறைமுகமாக சர்க்கரைகள் கலந்திருக்கும் போது, அவற்றுடன் நாம் கூடுதலாக சர்க்கரையை சேர்ப்பது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே முடிந்த அளவு உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவற்றில் உள்ள மறைமுக சர்க்கரையின் அளவையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 99

  இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

  ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்: உங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் உணவு கட்டுப்பாட்டின் அளவை பொறுத்து தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய சர்க்கரையின் அளவானது மாறுபடும். “அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்” பரிந்துரையின்படி ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஒன்பது டீஸ்பூன் வரை சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES