ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆண்டிஆக்சிடென்ட்கள் மிக அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து நோய் கிருமிகளுடன் போராட உதவுகிறது. நெல்லிக்காய்களை தேர்வு செய்யும் போது பழுத்த பொன் நிறத்தில் உள்ள நெல்லிக்காய்களை அதிகம் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரண நெல்லிக்காய்யை விட நெல்லியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 • 17

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகமான மக்கள் தொகை பெருக்கமும், அதிகமான வாகன பயன்பாடும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மிக அதிகமான காற்று மாசுபாட்டினால் இந்திய தலைநகர் புது டெல்லி கிட்டத்தட்ட மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. இவ்வாறு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம். முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆஸ்துமா, சிஓபிடி(copd) போன்ற நோய்கள், இந்த மாசுபட்ட சூழலில் வாழும் மக்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுதலை நம்மால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சில உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் குறைக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 37

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  மஞ்சள் : இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை சமையலுக்காகவும், வேறு பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களின் போதும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளின் காயங்களை குணப்படுத்தும் தன்மை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலும் மஞ்சளில் ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளன. இன்றும் வீடுகளில் பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கும் பழக்கம் உள்ளது. மஞ்சளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நம் உடலின் சுவாச பாதையை சுத்தப்படுத்தும் வேலையையும் செய்து கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  ஆளி விதைகள் : ஆளி விதைகள் நம்முடைய நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. பைட்டோஸ்டிரோஜன்ஸ் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் காற்று மாசுபட்டுள்ளதால் ஏற்படுகின்ற ஒவ்வாமைகளை மிக எளிதில் குணப்படுத்த உதவுகிறது. இவற்றை நேரடியாக நெருப்பில் சுட்டோ அல்லது ஓட்மீல் மற்றும் சாலடுகளாகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  துளசி : துளசி பயன்படுத்தி காற்று மாசுபடுதலினால் ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த முடியும். துளசி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட்டு பின்பு மிதமான சூட்டில் அந்த நீரை பருகலாம் அல்லது நீங்கள் தினமும் குடிக்கும் தேநீரிலும் இதனை பயன்படுத்தலாம். அன்றாடம் துளசி சாரை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தம் செய்யப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  நெல்லிக்காய் : தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டால் உடலில் எந்த வித நோய்களும் அண்டாது என்று கூறப்படுவதுண்டு. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆண்டிஆக்சிடென்ட்கள் மிக அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து நோய் கிருமிகளுடன் போராட உதவுகிறது. நெல்லிக்காய்களை தேர்வு செய்யும் போது பழுத்த பொன் நிறத்தில் உள்ள நெல்லிக்காய்களை அதிகம் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரண நெல்லிக்காய்யை விட நெல்லியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  மாசு காற்றால் அதிகரிக்கும் நுரையீரல்கள் பாதிப்பு : இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

  பச்சை இலை காய்கறிகள் : கீரை போன்ற பச்சை இலை காய்கறி வகைகள் எப்போதும் நம் உடலுக்கு வலிமை அதிகரித்து, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்வதாகவே உள்ளது. ஆண்டிஆக்சிடண்ட்ஸ் இந்த பச்சை இலை காய்கறிகளிலும் அதிகமாக இருப்பதால், நுரையீரலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தீமை செய்யக்கூடிய கிருமிகளுடன் போராடி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவியாக உள்ளன.

  MORE
  GALLERIES