இன்றைய சூழ்நிலையில் பலரும் பல்வேறு சரும பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இளம் வயதினருக்கு முகப்பரு போன்ற சரும பிரச்னைகள் மிக அதிக அளவில் ஏற்படுகிறது. முகப்பருக்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்துக் குறைபாடு தான். எனவே முகப்பருக்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவு பழக்க வழக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும்.
பதின்ம வயதில் இருக்கும் பெரும்பாலானோர் முகப்பரு பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிலருக்கு பருவ காலங்களில் உண்டாகும் இந்த முகப்பருக்கள் நாளடைவில் முகம் முழுவதும் பரவி நம் தோற்றத்தையே மாற்றி விடும். சிலருக்கு சில ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் இந்த முகப்பருக்கள் அதன் பிறகு மெல்ல மறைந்துவிடும். ஆனால் சிலருக்கோ அவர்கள் மத்திய வயதை நெருங்கினாலும் கூட மறையாமல் அப்படியே இருக்கும்.
இவற்றில் இருந்து தப்பிக்க ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பழக்கத்தை கடைபிடிக்கும் போது அவை முகப்பருக்களை தடுப்பது மட்டுமல்லாமல், நமது ஒட்டு மொத்த சரும மற்றும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பளபளப்பான சருமத்திற்கு வழிவகை இருக்கிறது. மேலும் சரியான உணவு கட்டுப்பாட்டுடன் முகப்பருக்கள் தோன்றும் ஆரம்ப கட்டத்திலேயே சரியான சிகிச்சை முறைகளை பின்பற்றுவதன் மூலம் முகப்பருக்களை நாம் அறவே ஒழிக்கலாம். அந்த வகையில் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் உணவில் சேர்க்க வேண்டிய நான்கு வகையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பற்றிய இப்போது பார்ப்போம்.