சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதில் ஆப்பிள் மிகவும் சிறந்தது என்று அறியப்பட்டுள்ளது. ஏனெனில் இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஆப்பிள்களை தவறாமல் உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் நிறைந்துள்ளது. எனவே இரவில் ஆப்பிளை சாப்பிட்டால் செரிமான கோளாறை உண்டாக்கும். அதனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக் கூடாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். பகலில் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது, அதன் சத்துக்களின் முழுப் பலனையும் பெற, வெறும் வயிற்றிலும் ஆப்பிளை சாப்பிடலாம் என்கின்றனர்.