உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் மிக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலின் உள்ள கூடுதலான கொழுப்பை குறைப்பதும் மிக முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுபவர் மற்றும் உணவு குறித்து அதிக அக்கறை கொண்டிருப்பவர் என்றாலும் கூட, சில வகை உணவுகளை ஒரே சமயத்தில் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.
மாவுச்சத்து, புரதச்சத்து காம்பினேஷன் ஆகாது : புரதச்சத்து கொண்ட இறைச்சியுடன், மாவுச் சத்து கொண்ட உருளைக்கிழங்கு அல்லது பிரெட் போன்றவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது. புரதம் கரையும்போது மாவுச்சத்து புளித்துவிடும். இதனால் வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதே சமயம் நீங்கள் பீன்ஸ் மற்றும் சாதம் சாப்பிடுபவர் என்றால் அது நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் சாதம் : சில சப்பாத்தி, கொஞ்சம் காய்கறி மற்றும் சாதம் சேர்த்து மதிய உணவு சாப்பிடுவது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. ஆனால், சப்பாத்தியும், சாதமும் அதிக கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட தானிய உணவுகள் ஆகும். இது செரிமானம் தாமதம் ஆகுவதற்கும், உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வழிவகை செய்யும். ஆகவே ஒரே சமயத்தில் இதை சாப்பிடக் கூடாது.