பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கும் பேரிச்சை இனிப்பில் பால் குடிப்பது இன்னும் கூடுதல் பலன் தானே...சரி அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.
இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல் : இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.