முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

ஒரு நாளைக்கு பல கிளாஸ் தண்ணீர் குடிப்பதை நிபுணர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், நீரிழப்பை தவிர்க்க உங்கள் டயட்டில் அதிக அளவு தண்ணீர் சார்ந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.

  • 110

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    கோடையில் மக்கள் அடிக்கடி உடலில் நீரிழப்பு ஏற்பட்டது போன்றும் மற்றும் சோர்வாகவும் உணர்கிறார்கள். கோடை காலத்தில் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளில் நீர்ச்சத்து குறைபாடும் ஒன்று. எனவே இந்த வெயில் உங்களை முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 210

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான ஒன்று. ஒரு நாளைக்கு பல கிளாஸ் தண்ணீர் குடிப்பதை நிபுணர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், நீரிழப்பை தவிர்க்க உங்கள் டயட்டில் அதிக அளவு தண்ணீர் சார்ந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.

    MORE
    GALLERIES

  • 310

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    மாம்பழம் : இந்த சீசனல் பழம் கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். இதில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. மேலும் இது ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. மாம்பழம் பார்வை திறனை மேம்படுத்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 410

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    தர்பூசணி : கோடை காலத்தில் பலருக்கும் பிடிக்கும் தர்பூசணி சுவையானது மட்டுமல்ல, அதிக ஊட்டச்சத்துக்களும், நீர்ச்சத்தும் நிறைந்தது. இதில் சுமார் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்த பழம் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை போக்குகிறது. இதில் வைட்டமின் சி, மாங்கனீஸ், ஃபோலேட், பொட்டாசியம், பி வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 610

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    வெள்ளரி காய்: கொளுத்தும் கோடை வெயிலுக்கு மற்றொரு சிறப்பான உணவு வெள்ளரி. விலை மலிவான அதே சமயம் அதிக நீர்சத்து கொண்ட வெள்ளரியை வெயில் நாட்களில் தினசரி சாப்பிடுவது உடலை டிஹைட்ரேட் ஆகாமல் தடுக்கிறது. மேலும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க, அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க வெள்ளரி உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 710

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    அன்னாசி: வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அன்னாசிப்பழ சாற்றை கோடையில் உட்கொள்வது மூட்டுவலி பிரச்சனையை சமாளிக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 810

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    ஆப்பிள்: இந்த பழத்தில் கரைய கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடையில் ஏற்பட கூடிய வெப்ப பக்கவாதம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஆப்பிள்களில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள், பற்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    பப்பாளி : இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். பப்பாளி சன்பர்னை தணித்து, வெயிலால் உடலில் ஏற்படும் நிற மாற்றத்தை சரி செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

    ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் 80% நீர்ச்சத்து உள்ளது, இது உடலை நன்கு ஹைட்ரேட் செய்கிறது. ஆரஞ்சுகள் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக அறியப்படுகின்றன. எனவே கோடையில் இந்த பழத்தை அதிகம் எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    MORE
    GALLERIES