முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

எனினும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க உணவு மற்றும் பானங்கள் பற்றிய சில கட்டுக்கதைகளும் இருக்க தான் செய்கின்றன. அவை குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்.

  • 110

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    கோடை காலத்தில் சில வகை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது நம் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில் உடல் சூட்டை தணிக்கும் உணவுகள் மற்றும் பானங்களை மக்கள் தேடி தேடி டயட்டில் சேர்த்து வருகின்றனர்

    MORE
    GALLERIES

  • 210

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    எனினும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க உணவு மற்றும் பானங்கள் பற்றிய சில கட்டுக்கதைகளும் இருக்க தான் செய்கின்றன. Vieroots Wellness Solutions-ன் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் பிஜு கேஎஸ் கோடையில் நம் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவு மற்றும் பானங்கள் பற்றிய உண்மை தகவல்களை வழங்கி இருக்கிறார். இவரது தகவலின்படி சில பழங்கள் மற்றும் காய்கறிகள் கோடை சீசனில் எப்படி நம்மை நன்றாக உணரவைக்கும் என்பது குறித்த சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 310

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    கோல்ட் ட்ரிங்க்ஸ் (Cold Drinks): இங்கே வெறும் Aerated drinks பற்றி சொல்லவில்லை. ஸ்மூத்திஸ், ஜூஸ், ஐஸ்ட் டீ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சில்டு பிவரேஜஸை (Chilled beverages) குறிப்பிடுகிறோம். இவை நம்மை நன்றாக உணரவைக்கும், ஆனால் உடலின் உள் வெப்பநிலையை பாதிக்காது. இருப்பினும் Humid Weather கிளைமேட்டில் வியர்வை விகிதத்தை குறைப்பதன் மூலம் வெப்பத்தை குறைக்க உதவுகின்றன. எனவே வியர்வை விகிதத்தை (rate of perspiration) குறைக்கக்கூடிய எந்த ஒரு பானம் அல்லது உணவும் Humidity உச்சத்தில் இருக்கும் போது உட்கொள்ள வேண்டும். ஹைட்ரேஷனை அதிகரிக்கவும் இந்த பானங்கள் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 410

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    ஹாட் ட்ரிங் : சிலருக்கு கோடையில் சூடான பானங்கள் அருந்தினால் உடல்நிலை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. இருந்தாலும், ‘இரும்பினால் தான் இரும்பை வெட்ட முடியும்’ என்பது போல சூடான பானங்களை அருந்தினால் கோடையை சமாளிக்க முடியும் என்பதில்லை. ஒரு கப் சூடான காபி அல்லது டீ உங்களை ஹாட்டாக உணரவைக்கும், ஏனெனில் இவை வியர்வையின் விகிதத்தை அதிகரிக்கும். இதனால் Humid மற்றும் வெப்பமான காலநிலையில் இவை மேலும் உங்களை ஹாட்டாக உணர செய்யும். Humidity குறைவாக இருந்தால், அதிக வியர்வை உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 510

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    பழங்கள்: கோடையில் நாம் நன்றாக உணர பழங்கள் நிச்சயமாக உதவும் என்பதை மருத்துவர் பிஜு ஆமோதிக்கிறார். பழங்கள் ஹைட்ரேஷன் அளவை கணிசமாக அதிகரிப்பதோடு ஹைபர்தெர்மியா (Hyperthermia ) மற்றும் அதன் மிகவும் ஆபத்தான வடிவமான ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன. தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள்மாம்பழம், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் கோடையில் உடலுக்கு நல்லது. Pulpy fruits-களை ஒரு பவுல் எடுத்து கொள்வது உங்களை நன்றாக உணரவைக்கும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    MORE
    GALLERIES

  • 610

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    காய்கறிகள்: நீர்சத்து உள்ள காய்கறிகள் உடலில் ஹைட்ரேஷன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கீரை, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளரிகள், தக்காளி, காளான்கள், செலரி மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய மேக்ரோ மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்ஸ், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்ஸ்களை வழங்குகின்றன. உடலை ஹைட்ரேட்டிங்-ஆக்குவதை தவிர, காய்கறிகள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க ஆய்வுகள் எதுவும் இல்லை என்கிறார் டாக்டர் பிஜு.

    MORE
    GALLERIES

  • 710

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    காரமான உணவுகள்: காரமான உணவுகள் (Spicy food) நம் உடலின் வெப்பநிலையை சீராக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை. உண்மையில், மிளகாய் இயற்கையில் Inflammatory கொண்டதாக அறியப்படுகிறது. எனவே டாக்டர் பிஜு காரமான உணவை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட பரிந்துரைக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 810

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ் : பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்கள் காஃபின் நிறைந்ததாக இருக்கின்றன. எனவே அவை உங்கள் உடலின் ஹைட்ரேஷன் லெவலை அதிகரிப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கலாம். பல ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ் ஊட்டச்சத்து மதிப்பை கொண்டிருக்கும் அதே நேரம், அவை நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய காம்பவுண்ட்ஸ்களையும் சேர்த்தே கொண்டிருப்பதாக டாக்டர் பிஜு குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 910

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    இளநீர் & மூலிகைகள்: இளநீர் ஹைட்ரேடிங் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதால் கோடை காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சிறந்த பானமாக இருக்கிறது. அதேபோல புதினா அல்லது மஞ்சள் போன்ற சில மூலிகைகள் கலந்த மோரை குடிப்பது வெப்பத்தை சமாளிக்க ஒரு நல்ல தேர்வு.

    MORE
    GALLERIES

  • 1010

    கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

    உணவை தவிர்ப்பது... நீங்கள் சில நேரங்களில் உணவை தவிர்த்தால், உங்கள் உடல் வெப்பநிலையை சீராக்க முடியும். நீங்கள் சாப்பிடாத போது, கலோரி உட்கொள்ளல் குறைகிறது இதனால் உடலின் core temperature குறைகிறது. இருப்பினும் நீங்கள் இந்த பழக்கத்தை இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கின் ஒரு பகுதியாக மாற்றாத வரை இது ஆரோக்கியமற்ற பழக்கமாகும் என சுட்டிக்காட்டுகிறார் பிஜு.

    MORE
    GALLERIES