முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

Benefits of dragon fruit : டிராகன் பழத்தில் ஆன்டிடூமர், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த சிறப்பு பண்புகள் பெண்களை மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும். இதனுடன், இந்த பழம் புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

 • 19

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  டிராகன் பழம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் அதிகமாக விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று. தற்போது, இந்தியாவிலும் இது பிரபலமாக உள்ளது. இதில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில், சர்க்கரை நோய் முதல் கேன்சர் வரை பல நோய்களை கட்டுப்படுத்துவதற்கான மூலக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், உள்ள நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

  MORE
  GALLERIES

 • 29

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு டிராகன் பழம் ஒரு சிறந்த தேர்வு. ஏனெனில், இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இதில், உள்ள சிறிய அளவிலான விதைகள் பல வகைகளில் நன்மை பயக்கிறது.

  MORE
  GALLERIES

 • 39

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது. இதனால், நீங்கள் இளமையான தோற்றத்தை பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 49

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  இதில், இரும்புச் சத்து, மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இதனால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே, நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவும். அதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 59

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் சிறந்தது. இதயத்திற்கும் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 69

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  இதன் சதை வெண்ணெய் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, பால் பொருட்களைபோல் இதுவும் புரோபயோடிக் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  டிராகன் பழம் இதயத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தின் விதைகளில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 89

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  டிராகன் பழத்தில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நீரிழிவு நோய் இல்லாதவர்கள், டிராகன் பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயின் ஆபத்தை குறைக்கும்.

  MORE
  GALLERIES

 • 99

  மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை... டிராகன் பழம் தரும் நன்மைகள்..!

  ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் மற்றும் கால்-கை வலிப்பு போன்ற மூளை செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம். இத்தகைய நோயிலிருந்து நிவாரணம் பெற டிராகன் பழம் உதவும்.

  MORE
  GALLERIES