ஸ்வீட் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? இனிப்பு வகைகளை உலகில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள்! ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு ஊருக்குமே சிறப்பான இனிப்பு வகைகள் உள்ளன. ஒரு ஸ்பெஷல் ஸ்வீட்டை தயார் செய்வதற்கு அடிப்படையாக பால் மற்றும் சர்க்கரை இருந்தாலே போதும். உலக பால் தினம், பால் குடிப்பது, பாலில் இருக்கும் ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி வலியுறுத்துகிறது. பாலை அப்படியே அருந்துவதற்கு பதிலாக பாலை அடிப்படை பொருளாக வைத்து சுவையான இனிப்புகளை செய்யலாம். உலக பால் தினத்தை முன்னிட்டு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு வகைகள் இங்கே.
கீர் : இந்தியா முழுவதுமே பெரும்பாலான விசேஷ நாட்களில், பண்டிகைங்களில், திருமணங்களில் கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறும் இனிப்பு, கீர். இதில் அரிசி, பால், மற்றும் உலர் பழங்கள் பழங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். விருந்துக்குப் பிறகு பாயசம் அல்லது கீர் பரிமாறப்படும். நீங்கள் விரும்புவதைப் போல சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ கீரைப் சாப்பிடலாம்.
ரப்ரி : ரப்ரி என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் மிகவும் ரிச்சான ஒரு ஸ்வீட் ஆகும்! பார்ட்டி, டின்னர் மீட்டிங், கெட்-டு-கெதர் கொண்டாட்டங்கள் ஆகிய இடங்களில் ரப்ரி கட்டாயம் இடம்பெறும். பால், பாலாடை, ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஒருசில பொருட்களை வைத்துக் கொண்டு ரப்ரியை மிக எளிதாக தயாரித்து விடலாம். ரப்ரியை தனிப்பட்ட இனிப்பாகவும் சாப்பிடலாம் அல்லது ஐஸ்கிரீம் குல்பி அல்லது ஜிலேபியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தண்டை : கோடை காலத்தில் பலரும் குளிர்ச்சியான பானங்களை விரும்புவார்கள். வழக்கமான பானங்களில் இருந்து விலகி, பாலிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான இனிப்பு பானத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! ‘தண்டை’யை எப்படி தவிர்க்க முடியும்? பாதாம் பால் மற்றும் உலர் பழங்கள் விதைகள் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது தண்டை. குளிர்காலங்களில் பாதாம் பாலாக சூடாக வழங்கப்படும் தண்டை, கோடைக்காலத்தில் இன்னும் கொஞ்சம் சுவையூட்டப்பட்டு குளிர்ச்சியாக்கப்பட்டு கெட்டியாக பரிமாறப்படும்.
பெங்காலி பனீர் பாயசம் : அன்றாட உணவுகளில் பனீர் சமீப காலமாக அதிகமாக இடம் பெற்று வருகிறது. ஆனால் மேற்கு வங்காளத்தில் பனீர் தினசரி இனிப்பு வகைகளில் ஒன்றாக இடம்பெறும். நாம் எப்போதாவது தான் ரசகுல்லா அல்லது பனீர் ஜாமுன் ஆகிய இனிப்புகளாக பனீரை சாப்பிடுவோம். ஆனால் பெங்காலி மக்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரை நம்மூரின் பாயசம் போல செய்கிறார்கள்.