சமீப ஆண்டுகளாக குறிப்பாக பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் தங்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்ட துவங்கியுள்ளனர். ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி தங்கள் டயட்டில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் வழக்கமான வெள்ளை அரிசிக்கு பதிலாக, பழுப்பு அரிசிக்கு எனப்படும் பிரவுன் அரிசியை தங்கள் டயட்டில் சேர்த்து கொண்டு வருகின்றனர்.
பிரவுன் அரிசி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் மத்தியில் சமீப காலமாக ஒரு பிரபலமான தானியமாக மாறியுள்ளது. இந்த அரிசி தானியத்தின் வெளிப்புற உமியை அகற்றி தயாரிக்கப்படுகிறது. இந்த நுட்பம் குறிப்பிட்ட இந்த தானியத்தின் ஊட்டச்சத்து-நிறைந்த தவிடு (Nutrient-Dense Bran) மற்றும் ஜெர்ம் லேயரை பாதுகாக்கிறது என்பதால் இது ஆரோக்கிய மாற்றாக அமைகிறது. Fisico Diet Clinic-ஐ சேர்ந்த பிரபல உணவியல் நிபுணர் Vidhi Chawla, ஷேர் செய்துள்ள பிரவுன் அரிசியின் சில அற்புத நன்மைகள் இங்கே..
பிரவுன் அரிசியானது குறைந்த கிளைசெமிக் இன்டக்ஸை கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. மேலும் டயட்டில் பிரவுன் அரிசி சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. கூடுதலாக பிரவுன் ரைஸ் கார்போஹைட்ரேட்டின் ஒரு வடிவமாக இருப்பதால் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவுகிறது. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசியை உணவில் சேர்த்து கொள்கின்றனர். வெள்ளை அரிசியை விட பிரவுன் அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதிக நார்ச்சத்துள்ள மற்றும் குறைந்த கலோரிகளை கொண்ட உணவை டயட்டில் சேர்க்கும் கொள்ளும் போது நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கும். அதே போல இதிலிருக்கும் அதிக மாங்கனீஸ் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் பிரவுன் ரைஸ் உடலில் HDL கொழுப்பை அதிகரிக்க உதவுவதோடு உடல் பருமனை தடுக்கிறது.
பிரவுன் அரிசியில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலசிக்கல் ஏற்படாமல் தடுத்து செரிமான பாதையை சீராக வைக்கிறது. இதனால் இந்த அரிசியை டயட்டில் சேர்த்து கொள்ளும் ஒருவரின் வழக்கமான மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கங்கள் மேம்படுகிறது. பிரவுன் அரிசியின் வெளிப்புறத்தில் ஒரு கூடுதல் அடுக்கு தவிடு உள்ளது, இது அதிகப்படியான அமில உறிஞ்சலை (Acid absorption) தடுக்கிறது. பெருங்குடல் அழற்சி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும் வகையிலான சிறந்த பண்புகளை கொண்டுள்ளது இந்த அரிசி.
இந்த வகை அரிசியை டயட்டில் சேர்ப்பது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் Blocked arteries, ஹார்ட் ப்ராப்ளம்ஸ், ஸ்ட்ரோக்ஸ் மற்றும் Exhausted heart போன்ற இதயம் சார்ந்த சிக்கல்களை தடுக்கிறது. தவிர இந்த அரிசியை டயட்டில் சேர்ப்பது உயர் ரத்த அழுத்தம் மற்றும் தமனி கடினமாதல் (Artery hardening) போன்ற பிற வாஸ்குலர் பிரச்சனைகளை நிர்வகிக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்தமாக ஒருவரின் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து பராமரிக்கிறது.
பிரவுன் அரிசியில் இருக்கும் Gama-aminobutrynic ஆசிட் அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களை தடுக்க உதவுகிறது. இது புரோட்டிலெண்டோபெடிடேஸ் என்ற நொதியைத் தடுப்பதன் மூலம் நோயைத் தடுக்க உதவுகிறது. இந்த நொதி அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Protylendopetidase என்ற நொதியை தடுப்பதன் மூலம் அல்சைமர் நோயை தடுக்க உதவுகிறது. இந்த நொதி அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் பிரவுன் ரைஸ் சேர்த்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரவுன் அரிசியில் Tryptophan என்ற அமினோ ஆசிட் உள்ளது, இது மூளையை நிம்மதியான நிலையில் வைக்க உதவுகிறது. அதே போல பிரவுன் அரிசியில் தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனான மெலடோனின் அதிக செறிவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது ஒருவரின் தூக்க சுழற்சியை மேம்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கும், தூக்கமின்மை பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும்.
பிரவுன் அரசி வழங்கும் மற்றொரு முக்கிய நன்மை மனஅழுத்தத்தை குறைக்கிறது. முளைகட்டிய பழுப்பு அரிசியில் உள்ள குளுட்டமைன், கிளிசரின் மற்றும் GABA போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதே இதற்கு காரணமாகிறது. இவை சோகம், பதற்றம் மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய மூளை சமிக்ஞைகளை தடுக்கும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும். இவை நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தில் கூட நல்ல மாற்றத்தை காண உங்கள் தினசரி உணவில் பிரவுன் அரிசியை சேர்க்கலாம்.