நெகட்டிவ் கலோரி உணவுகள் என்றால் என்ன.? எடையை குறைக்க உதவும் குறைந்த கலோரி உணவுகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெகட்டிவ் கலோரி உணவுகளை பற்றி வெகுசிலரே கேள்விப்பட்டிருப்பார்கள். இந்த உணவுகளை உண்ட பின் செரிமானிக்க உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை விட அந்த சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடல் அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளும். அந்த உணவுகளே நெகட்டிவ் கலோரி உணவுகள் ஆகும். இந்த டயட்டின் போது எடுத்து கொள்ளும் உணவுகள் ஜீரணமாகும் போது கலோரிகளையும் சேர்த்து எரிப்பதால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. ஜீரணிக்க அதிக கலோரிகளை எரிக்கும் என்பதால் எடை இழப்புக்கு நெகட்டிவ் கலோரி உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உடல் எடையை குறைக்க உதவும் நெகட்டிவ் கலோரி உணவுகள் இங்கே..
லெட்டூஸ் கீரை (Lettuce) : உங்கள் சாலட்களில் கொஞ்சம் லெட்டூஸ் கீரைகளை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் நல்ல அளவு ஃபைபர் சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை நம்பமுடியாத அளவிற்கு கொண்டுள்ளது. அதே நேரத்தில் 100 கிராமுக்கு 15 என்ற குறைந்த கலோரியை கொண்டுள்ளது.
வெள்ளரி : வெள்ளரிகள் அதிக அளவு ஹைட்ரேடிங் மற்றும் மினரல்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்கள் அதிகம் உள்ளன. கோடை மற்றும் வெப்பம் மிகுந்த நாட்களில் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவாக இருக்கிறது. உடலின் வாட்டர் பேலன்ஸை மேம்படுத்த வெள்ளரிகள் உதவுகின்றன. இதில் 100 கிராமுக்கு 16 கலோரிகள் உள்ளன.
ஆப்பிள் : ஆப்பிள்களில் 100 கிராமுக்கு தோராயமாக 50 கலோரிகள் இருக்கின்றன. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆப்பிள்களில் ஏராளமாக நிறைந்திருக்கும் pectin, எடை குறைப்பை ஊக்குவிக்கும் ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். மேலும் இது படிப்படியாக சர்க்கரையை வெளியிடுகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.