உடலுக்கு போதுமான கால்சியம் சத்துகள் கிடைக்கவும், எலும்புகள் பலம் அடையவும் பால் அருந்த வேண்டும் என்ற அறிவுரையை சின்ன வயதில் இருந்து கேட்டு வந்திருப்பீர்கள். அந்தக் கருத்தில் எந்தவித மாற்றம் இல்லை. பால் சார்ந்த ஒவ்வொரு உணவுப் பொருளிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் ஏராளமாக நிரம்பியுள்ளன. ஆனால், பாலில் மட்டும்தான் கால்சியம் இருக்கிறதா என்றால், அதுதான் கிடையாது.
வேறு சில உணவுப் பொருட்களிலும் பாலைக் காட்டிலும் மிகுதியான கால்சியம் சத்து உண்டு. 250 மில்லி கொண்ட ஒரு கிளாஸ் பாலில் 300 மி.கி. அளவுக்குத் தான் கால்சியம் இருக்கிறது. நம் உடலுக்குத் தேவையான கால்சியம் அளவில் 25 சதவீதம் மட்டுமே இதில் பூர்த்தியாகிறது. நாளொன்றுக்கு நமக்கு 100 மி.கி. அளவுக்கு கால்சியம் தேவைப்படும்.
எள்ளு விதைகள் : வெறும் 4 ஸ்பூன் அளவுக்கு எள்ளு விதைகள் உட்கொண்டால் அதில் இருந்து 350 மி.கி. அளவுக்கு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது. சாலட் தயாரிக்கும் போது, அதைன் மேற்பரப்பில் எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். வறுக்கப்பட்ட எள்ளு விதைகளை லட்டு மற்றும் அல்வா போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். எள்ளு, வெள்ளம் சேர்க்கப்பட்ட உருண்டை மிக சுவையானதாக இருக்கும்.