சாம்பார் , காரக்குழம்பு என ஏதோ ஒரு வகையில் முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வோம். சீசனே இல்லை என்றாலும் முருங்கைக்காயை தேடி அலைந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஃபேன் பேஸ் இங்கு உண்டு. இப்படி அதன் சுவையை அறிந்த நீங்கள் அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. எனவே முருங்கைக்காயில் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ...
சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும்.
எலும்புகளை பலப்படுத்தும் : முருங்கைக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பது எலும்புகளுக்கு அதிக நன்மை சேர்க்கிறது. எனவே எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முருங்கைக்காயில் இருப்பதால் வாரம் ஒருமுறையேனும் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் எதிர்காலத்தில் வரும் எலும்பு பிரச்சனைகளையும் தவிர்க்காலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் : நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரம் முருங்கைக்காய். அந்த வகையில் இருமல், சளி போன்ற தொற்று பாதிப்புகளுக்கு முருங்கைக்காயை சாப்பிடுவது பக்கபலம். அதில் உள்ள விட்டமின் சி-யே உங்களுக்கு போதுமானது. அதுமட்டுமன்றி இதயம் தொடர்பான உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கும் முருங்கைக்காய் நல்லது.