ப்ரோக்கோலி : விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்றவை நிறைந்தது ப்ரோக்கோலி ஆகும். இதில் சல்ஃபோரஃபைன் என்னும் சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கக் கூடியது ஆகும். ப்ரோக்கோலியை ஆவியில் வேக வைத்து அல்லது கூட்டு, பொரியல் போன்ற எந்த வகையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சாலட் அல்லது சூப் வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.
பாலக்கீரை : சாதாரணமாக வீட்டை சுற்றியுள்ள காலியிடங்களில் வளரக் கூடிய இந்தக் கீரையை எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்டுகள் கிடைக்கும். மிக அதிகமான நார்ச்சத்து இதில் உள்ளது. நம் உடலின் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். பாலக்கீரை, பாசிப்பயறு சேர்த்து சாம்பார் அல்லது சூப் செய்து சாப்பிடலாம். இதை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
இனிப்பு உருளைக்கிழங்கு : அதிகப்படியான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை இனிப்பு உருளைக்கிழங்குகளில் உள்ளன. இதில் உள்ள பீட்டா கரோடின் என்னும் சத்து நம் உடலில் அழற்சியை போக்க கூடியவை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். சாம்பார், பொரியல், கூட்டு போன்ற வகைகளில் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிக ஆரோக்கியமானது.
கிளைக்கோசு : கிளைக்கோசு என்பது முட்டைக்கோசு போன்றதொரு காய்கறி வகையாகும். இதில் நார்ச்சத்து, விட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக் கூடிய இந்த காய்கறியை நாம் கூட்டு வைத்து சாப்பிடலாம். இதிலேயே சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். இதில் விட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. ரத்த சர்க்கரை அளவுகளை சீரானை நிலையில் வைத்திருக்கும்.
முட்டைக்கோசு : சாதாரணமாக அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக் கூடிய இந்தக் காய்கறியில் நார்சத்து மிகுதியாக உள்ளது. இது கொலஸ்ட்ராலை கரைக்கும். துரித உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்றாலும் கூட, தவிர்க்க இயலாத சூழல்களில் அவற்றை சாப்பிடும்போது கட்டாயம் அதனுடன் முட்டைக்கோசு சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டைக்கோசு சூப் அருந்துவது சிறப்பான அனுபவத்தை தரும்.