ஆனால், கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்ற மக்கள் கட்டாயம் இதை ருசித்து பார்த்திருப்பீர்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான். கலோரி சத்து மிக, மிக குறைவு. அதேபோல கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது. விட்டமின் பி, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, எண்ணற்ற ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்த இந்த பழத்தை இனி கடைகளில் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஒருவேளை நீங்கள் செல்லும் கடைகளில் இல்லை என்றாலும், எங்கு கிடைக்கும் என்று விசாரித்து வாங்கி விடவும்.
செல்களின் அழிவை தடுக்கும்: நம் உடலுக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் செல்களின் அழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், நீங்கள் நட்சத்திர பழங்களை சாப்பிட்டு வந்தால் செல்களின் அழிவு தடுக்கப்படும். இதில் உள்ள வைட்டமின் சி, பி கரோடினீன், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை இருப்பதால் செல்களின் அழிவை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது: மெக்சீனிசியம், இரும்புச்சத்து, ஜிங்க், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள நட்சத்திர பழங்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அடிக்கடி ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவர்கள், மீண்டும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இந்த பழத்தை சாப்பிடலாம்.