முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

கத்தரிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் சி, நார்ச்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் நம்முடைய உடலுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக உள்ளது.

  • 19

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    நாம் சாப்பிடும் அனைத்துக் காய்கறிகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை அளித்தாலும் மக்கள் பெரும்பாலும் வெறுக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக உள்ளது கத்தரிக்காய். அய்யோ..“கத்தரிக்காயா? எங்களுக்கு வேண்டாம் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒதுக்கி வைப்பது வழக்கம்“.ஆனால் இது தான் மிகப்பெரிய தவறு. ஆம் கத்தரிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் சி, நார்ச்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் நம்முடைய உடலுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில் உடலுக்கு எவ்வகையில் பயனளிக்கிறது என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 29

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    மூளை செயல்திறன் அதிகரிப்பு: கத்தரிக்காயில் உள்ள பைட்டோ- நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல்திறனைஅதிகரிப்பதோடு செல்களின் மெம்பிரேன்களைப் பத்திரமாக காத்துக்கொள்வது மட்டுமில்லாமல் நல்ல நினைவாற்றலையும் நமக்கு அளிக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    எலும்பு ஆரோக்கியம்: கத்தரிக்காயில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் நீங்கள் உட்கொள்ளும் போது எலும்புகளுக்கு ஆரோக்கியத்திற்கு அளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 49

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: கத்தரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவியாக உள்ளது. மேலும் உங்களது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை சமன் செய்வது முதல் உறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களிலிருந்து நம்மை பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    இரத்த சோகையை பிரச்சனைக்குத தீர்வு: கத்தரிக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. மேலும் தொடர்ந்து நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போதுஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடல் சோர்வு இல்லாமல் இருப்பதற்கு உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது : கத்தரிக்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது கத்தரிக்காயில் உள்ள பாலிஃபீனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    எடை அதிகரிப்பதை தடுக்கிறது : கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்துக்களால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    பிற நன்மைகள் : தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகளை குணப்படுத்த கத்தரிக்காயை சாப்பிடலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது. இதோடு முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றதோடு, வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளிள் ஒன்றாக கத்தரிக்காயும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 99

    கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க...

    இது போன்று பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளுக்கு கத்தரிக்காய் தீர்வு காண்பதால், இனி ஒரு நாளும் உங்களுடைய உணவில் கத்தரிக்காயை ஒதுக்கி வைக்காதீர்கள்.

    MORE
    GALLERIES