கோடைக்காலம் வந்தால் விடுமுறையும் நம்முடன் சேர்ந்து வரும் என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், அக்னி நட்சத்திரம் வெயிலை எப்படி தாங்கிக்கொள்ள போகிறோம்? என மனநிலையும் ஒருபுறம் இருக்கும். இதற்கேற்றால் போல் தான், தற்போது இயல்பை விட கடந்த இரு தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக யில் சில பகுதிகளில் 108.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுப்போன்றவெயிலின் தாக்கத்தினால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு நம்மை சோர்வாக்குகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் இயற்கையாகவே நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ இந்த கோடைக்காலத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காய் ரெசிபிகளின் சில லிஸ்ட் இங்கே..
பீர்க்கங்காய் மசாலா கறி : அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காயில் பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். இவற்றில் ஒன்று தான் பீர்க்கங்காய் கறி. இதை செய்வதற்கு முதலில் நீங்கள் ஒரு கடாயில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி, கரம் மசாலா மற்றும் குழம்பு மசால் பொடி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் போதும் சுவையான பீர்க்கங்காய் கறி ரெடி.
பீர்க்கங்காய் தேங்காய் பொரியல் : நீங்கள் பீர்க்கங்காயை வைத்து செய்யக்கூடிய சிம்பிள் ரெசிபிகளில் ஒன்று பீர்க்கங்காய் பொரியல். இதை செய்வதற்கு முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. நன்கு வெந்ததும் இறக்கும் போது சுவைக்கு தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
பீர்க்கங்காய் சூப் : வெயிலின் தாக்கத்தினால் உடலில் குறையும் நீர்ச்சத்தை அதிகரிக்க, நீங்கள் பீர்க்கங்காயில் சூப் செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு முதலில் நீங்கள் வெங்காயம், பூண்டு, பீர்க்கங்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்தால் போதும் சுவையான பீர்க்கங்காய் சூப் ரெடி.
பீர்க்கங்காய் சட்னி : முதலில் நீங்கள் பீர்க்கங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், மிளகாய், பூண்டு, துருவிய தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் போதும் சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி.இதே போன்று நீங்கள் ஸ்டஃப்டு பீர்க்கங்காய் ரெசிபியும் செய்து சாப்பிடலாம். நிச்சயம் இது உங்களுக்கு சுவையோடு ஆரோக்கியத்தையும் அளிக்கும்.