கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் நிகழும் அதிக அளவிலான மரணத்திற்கு இருதய நோய்கள் முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் மரணமடையும் 4 பேரில் ஒருவருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதய செயலிழப்பு நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளது பெரும் கவலை அளிக்க கூடிய செயலாக உள்ளது.
உலக அளவில் 28 வயதுடைய இளம் தலைமுறையினரை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இளைஞர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், மன அழுத்தம், மோசமான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியன இதய செயலிழப்பு, தமனி இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்களுக்கு வாய்ப்பாக அமைவதாக ஆய்வு முடிவுகள் சில தெரிவிக்கின்றன.உங்கள் தமனிகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கூல்டிரீங்ஸ்: எந்த வகையான சோடாவும் உடலுக்கு நல்லது. இது உங்கள் ஆரோக்கியத்தில் சில தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், எடை அதிகரிப்பை ஊக்குவிக்கலாம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம். சோடாவிற்கு பதிலாக பழசாறுகள் அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.
இறைச்சி: சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சுவையாக இருக்கலாம் இது ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் நீங்கள் சாப்பிடக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உண்மையில், இதய பிரச்சினைகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியிலிருந்து விலகி இருப்பது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் சமீபத்திய ஆய்வின் படி, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ளும் நபர்களில் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் மோசமான இதய செயல்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.