குறிப்பாக தயிர் வயிற்றை இதமாக்குகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. தயிரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது லாக்டோபாகிலஸ் டெல்ப்ரூக்கி என்ற பாக்டீரியா கலவைகளுடன் நொதித்தல் மூலம் தயிராக மாறுகிறது.
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அதேபோல் இது பெண்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய தயிரை நீங்கள் ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த உணவே உங்களுக்கு நஞ்சாக மாறலாம். ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே அடுத்த முறையும் இந்த தவறை செய்யாமல் இருக்க இந்த உணவுகளுடன் தயிரையும் சேர்த்து சாப்பிடாதீங்க... அவை என்னென்ன பார்க்கலாம்.
வெங்காயம் : மக்கள் பெரும்பாலும் தயிர் மற்றும் வெங்காயத்தை ரைதா வடிவில் சாப்பிடுகிறார்கள். தயிர் குளிர்ச்சியானது. அதே நேரத்தில் வெங்காயம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்யும் என்பதால், இந்த பழக்கத்தை நீங்கள் உடனடியாக நிறுத்தினால் நல்லது. இந்த கலவையானது சொறி, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பிற தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.