அனைவரும் அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடியை பெற விரும்புவார்கள். ஆனால், ஒரு சிறிய ஆரோக்கிய பிரச்சனை உங்கள் தலைமுடியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முடி உதிர்தல், அடர்த்தி குறைவு மற்றும் வறட்சி ஆகியவை ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படலாம். ஸ்கேல்ப் பிரச்சினை, ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான வியர்வை ஆகியவை முடி உதிர்வுக்கு வழிக்குக்கும். தீவிரமான மருத்துவப் பிரச்சனை எதுவும் இல்லை என்றால், சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் உங்கள் தலை முடியை பாதுகாக்கலாம்.
புரோட்டீன்கள், இரும்பு சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமானவை. ஏனெனில், அவை முடியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் உச்சந்தலையை ஹைட்ரேட் செய்கின்றன. இதனால் முடி பளபளப்பாக காணப்படும். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் தகவல்படி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல ஊட்டச்சத்துக்களின் குறைபாடு காரணமாக முடி உதிர்தல் அதிகரிக்கலாம். முடி உதிர்வதைத் தவிர்க்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 5 வைட்டமின்கள் பற்றி இங்கே விரிவாக காணலாம்.
விட்டமின் எ (Vitamin A) : உங்கள் தலைமுடி கட்டுக்கடங்காமலோ, அடர்த்தி குறைவாகவோ, உடைந்து போனாலோ வைட்டமின் ஏ உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் A உங்கள் உச்சந்தலையில் முடி வளர உருவாக்குகிறது. இது இது ஈரப்பதத்தை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கீரை, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பால், முட்டை, மாம்பழம், பப்பாளி, தர்பூசணி போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
பயோட்டின் (Vitamin B) : முடி அதிகமாக உதிர்ந்தால், உங்கள் கூந்தல் பலவீனமாக உள்ளது என்பதை குறிக்கிறது. இதனால், கூந்தலின் அடர்த்தி குறையும். தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்களில் ஒன்று பயோட்டின். இது வைட்டமின் பி என்றும் அழைக்கப்படுகிறது. உங்களிடம் போதுமான பயோட்டின் இல்லை என்றால், உடலுக்கு தேவையான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. இதனால், உங்கள் ஸ்கால்ப்பிற்கு ஆக்ஸிஜன் குறைவாக கிடைக்கும். சரியான ஊட்டச்சத்து கிடைக்காததால், முடி உதிர்வை சந்திக்க நேரிடும்.
விட்டமின் சி (Vitamin C) : உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவதோடு, முடி வளர்ச்சியைத் தடுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி-யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஸ்கேல்பில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவை உட்கொண்டால் முடி உதிர்வைக் குறைக்கும்.
கொலாஜன் முடியின் கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால், போதுமான வைட்டமின் சி இல்லாமல், உங்கள் உடலால் அதை உற்பத்தி செய்ய முடியாது. ஆரோக்கியமான முடியைப் பெற, நீங்கள் போதுமான வைட்டமின் சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆரஞ்சு, sweet limes, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி உள்ளவை.
விட்டமின் D (Vitamin D) : வைட்டமின் டி குறைபாடு அலோபீசியாவை (alopecia) ஏற்படுத்தும். வைட்டமின் டி புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது புதிய முடி இழைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என சர்வதேச மூலக்கூறு அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, வழுக்கையில் கூட மீண்டும் முடி வளர தொடங்கும். முட்டையின் மஞ்சள் கரு, கடல் உணவுகள், காளான், ஓட்ஸ், சோயா பால் மற்றும் tofu ஆகியவை வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்கள்.