முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

கெமோமில் என்பது உலர்ந்த மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தேநீர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளான உடல்வலி, தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. 

 • 17

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  காலையில் கட்டிலில் இருந்து கண் விழித்ததுமே காபி அல்லது டீ குவளையை தேடாத ஆட்கள் கிடையாது. மூளையை சுறுப்பாக்கி ஆக்டிவாக செயல்பட வைக்க இந்த உற்சாக பானம் நமக்கு உதவியாக இருக்கிறது. அதுவும் வீட்டு வேலைக்கும், ஆபிஸ் வேலைக்கும் இடையே ஆக்டிவாக செயல்பட வேண்டிய பெண்களுக்கு உற்சாகம் என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே பெண்களுக்கு ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் கொடுக்கக்கூடிய 5 தேநீர் வகைகளை இப்போது பார்க்கலாம்...

  MORE
  GALLERIES

 • 27

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  1. கெமோமில் டீ: கெமோமில் என்பது உலர்ந்த மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தேநீர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளான உடல்வலி, தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. கெமோமில் டீ உடலைக் குணப்படுத்தி நரம்புகளைத் தளர்த்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் இன்சுலின் உணர்திறனைக் குறைக்கவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  2. இஞ்சி டீ: தினமும் இஞ்சி டீ குடிப்பதால் வீக்கம் மற்றும் சோர்வு குறையும். பாரம்பரியமாக, இஞ்சி பல மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு இதை குடிப்பது செரிமானம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  உடல் எடையை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் இந்த டீயை குடிப்பதால் வலி மற்றும் அழற்சி குறையும். தொண்டைப் புண், காய்ச்சல், கர்ப்பம் தொடர்பான குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவற்றிற்கும் இஞ்சி டீ பயனுள்ளதாக இருக்கும். கடைசியாக, முடி உதிர்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த இஞ்சி டீ கலவையை முடி மீண்டும் வளர பயன்படுத்தலாம், ஏனெனில் இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  3.புதினா டீ: புதினா டீ அல்லது பெப்பர்மிண்ட் டீ புத்துணர்ச்சியூட்டும் தேநீர் என்பதையும் தாண்டி, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பித்தத்தைக் குறைக்கவும், தசைச் சுருங்குவதைத் தடுக்கவும், வலியைக் குறைக்கவும் மற்றும் நரம்பு மண்டலத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் காரணமாக, தொற்று மற்றும் ஒவ்வாமைகளை குறைக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஏற்படும் மார்னிங் சிக்னஸ் அல்லது சோர்வை குறைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  4. பிளாக் டீ: பிளாக் டீயில் உள்ள அதிக காஃபின் , உடலில் எனர்ஜி லெவலை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை இல்லாமல் பிளாக் டீ குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்கிறது. சில சமயங்களில் மார்னிங் சிக்னஸ் மற்றும் குமட்டலைக் குறைக்கவும் இது உதவும். கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்ய, குளிர்ந்த பிளாக் டீ உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

  5.கிரீன் டீ: ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ரீன் டீ குடிப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருப்பதால் வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவும். கிரீன் டீ உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது, மன அழுத்தம், பதட்டம் மற்றும் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் எடை மேலாண்மையை நிர்வாகிக்கவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES