ஆப்பிளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar). இது ஒரு இயற்கை டானிக் ஆகும், இது ஆப்பிள் மற்றும் ஈஸ்ட் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஈஸ்ட், பழத்தில் உள்ள சர்க்கரையை ஆல்கஹால் ஆக மாற்றுகிறது. பின்னர் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் கலவையில் சேர்க்கப்பட்டு ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக புளிக்கவைக்கப்படுகின்றன. இது பெரும்பாலும் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைப்போல வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று.
ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியத்தை காக்கும். வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம், எடை இழப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைதல் போன்ற சில பிரச்சனைகளை தீர்க்க இவை உதவும். நாம் எவ்வாறு சில பிரச்சனைகளுக்கு கசாயம் போட்டு குடிப்போமோ அதே முறையை வெளிநாட்டினர் ஆப்பிள் சிடர் வினிகர் குடிப்பதன் மூலம் பிரச்சனைகள் தீர்த்துக் கொள்கின்றனர். அதன் சுகாதார நன்மைகளும் அறிவியல் ஆய்வுகள் மூலம் ஆதரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலும் பலர் இதனை குடித்து வருகின்றனர்.
இதில், பெக்டின் (Pectin) என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இரைப்பை அழற்சி, வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இதிலுள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. இருப்பினும் பல்வேறு ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகரை உபயோகிப்பதால் பலன்கள் பல இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளன. அது குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
1. காஸ்ட்ரோபரேசிஸை ஏற்படுத்தும்: (Causes gastroparesis): ஆப்பிள் சிடர் வினிகர் உணவு வயிற்றை விட்டு வெளியேறும் வீதத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் அவை குறைந்த செரிமான மண்டலத்தில் நுழைகிறது. இது காஸ்ட்ரோபரேசிஸை ஏற்படுத்தும். இது நீரிழிவு வகை 1 நோயாளிகளுக்கு இருக்கும் ஒரு பொதுவான நிலை ஆகும்.
4. பற்களில் பிரச்சினைகள் (Teeth problems): அமில இயல்புகளைக் கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் மூலம் தினமும் வாய் கொப்பளிப்பதால், வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். ஆனால் அமில உணவுகள் அல்லது பானங்கள் பல் எனாமலை சேதப்படுத்தும். இதனால் பற்களின் உணர்திறனை பாதிக்கப்பட்டு பல்கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலமும் பற்களிலும் இதே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
5. தோலில் எரியும் உணர்வு (Burning sensation on the skin): முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க ஆப்பிள் சிடர் வினிகர் உதவும். ஆனால் இவற்றை சருமத்தில் தடவும் போது சருமத்தில் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதில் உள்ள அசிட்டிக் அமிலம் சில சமயங்களில் சருமத்தை எரிக்கிறது. மேற்கணட சிக்கல்களைத் தவிர்க்க, அடிக்கடி ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.